கோவை: வால்பாறையில் மழை, வெள்ளம் போன்ற பேரிடர் காலங்களில் மக்களை பாதுகாப்பான இடத்தில் தங்க வைப்பதற்கு வால்பாறை அரசு மேல்நிலைப் பள்ளியை வட்டாட்சியர் பார்வையிட்டார்.

கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் மேற்குத் தொடர்ச்சி மலை அமைந்துள்ளது. தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் முதல் தொடங்கும் நிலையில், பேரிடர் காலங்களில் பொது மக்களை பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்வது குறித்து ஆய்வுகள் மேற்கொண்டு வருகின்றனர். வால்பாறை வட்டாட்சியர் தலைமையில் பொதுப்பணித் துறையினர், மின்சாரத் துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் ஆய்வுகள் மேற்கொண்டனர். இதில் கடந்த ஆண்டு பேரிடர் காலங்களில் ஆற்று ஓரங்களில் உள்ள மக்களைக் காப்பாற்றி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர்களை வால்பாறை அரசு கலைக் கல்லூரியில் தங்க வைத்தனர்.

இந்த ஆண்டு கல்லூரியைக் கொரோனா சிகிச்சை மையமாக மாற்றப்பட்டதால் மழை, பேரிடர் காலத்தில் பொது மக்களைப் பாதுகாப்பான முறையில் தங்க வைப்பது குறித்த நடவடிக்கையாக வால்பாறை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியை ஆய்வு செய்தனர். மேலும், ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பொது மக்களை பாதுகாப்பாக தங்க வைப்பது குறித்து ஆலோசனை நடத்தினார். இந்நிகழ்வில் வால்பாறை வட்டாட்சியர் ராஜன், மேல்நிலைப்பள்ளி சிவன்ராஜ், காவல் துறையினர் தீயணைப்புத் துறையினர் கலந்து கொண்டனர்.