பொள்ளாச்சி: கொரோனா பெருந்தொற்று தடுப்பு நடவடிக்கையாக ஊராட்சிகளில் சிறப்பு முகாம்கள் அமைத்து, கிராம மக்களுக்கு தடுப்பூசி செலுத்தவேண்டும் என பொள்ளாச்சியில் நடைபெற்ற ஒன்றியக்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

பொள்ளாச்சி தெற்கு ஒன்றியத்தில் ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. ஒன்றியக் குழு தலைவர் லட்சுமி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், தெற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராமப்புறங்களில் தார் சாலை அமைப்பது, குடிநீர் வசதி, அடிப்படை தேவைகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நிறைவேற்றுவது குறித்தும் வரவு செலவு கணக்கு உள்ளிட்ட 56 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

கொரோனா பெருந்தொற்று படிப்படியாகக் குறைந்து வருவதால், கிராமப்புற ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் வகையில், தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப் பணிகளை விரைவில் தொடங்க நடவடிக்கை எடுக்க விவாதிக்கப்பட்டது.
மேலும், தற்போது தடுப்பூசி மையங்களில் மட்டுமே தடுப்பூசி செலுத்தப்படுவதால், கிராம மக்கள் தடுப்பூசி மையங்களுக்கு செல்கின்றனர். ஆனால், அங்கு ஒரு நாளைக்கு 100 தடுப்பூசி மட்டுமே செலுத்தப்படுவதால் பல மணி நேரம் காத்திருந்து தடுப்பூசி செலுத்தாமல் திரும்பி வரும் நிலை ஏற்பட்டு வருகிறது.

எனவே, மாவட்ட நிர்வாகம் ஊராட்சி பகுதிகளுக்கு கூடுதல் தடுப்பூசிகளை ஒதுக்கி அந்தந்த கிராமங்களிலேயே தடுப்பூசி மையங்களை ஏற்படுத்தி கிராம மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த அரசு முன்வர வேண்டுமென்று கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.