கோவை: லஞ்சம் பெற்ற புகாரில் கிணத்துக்கடவு காவல்துறை ஆய்வாளர் மற்றும் தலைமை காவலர் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து, கோவை சரக டி.ஐ.ஜி முத்துசாமி அதிரடி நடவடிக்கை எடுத்தார்.

கிணத்துக்கடவு சென்றான்பாளையம் பிரிவில் கடந்த 20ஆம் தேதி இரு சக்கர வாகனம் மீது கார் மோதி முதியவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக காரை ஓட்டி வந்த ஓட்டுநர் சுரேஷ் என்பவரை கிணத்துக்கடவு காவல் துறையினர் கைது செய்தனர்.
ஆனால், கைது செய்யபட்ட ஓட்டுநரை ஜாமீனில் விடுவிக்க கிணத்துக்கடவு காவல்துறை ஆய்வாளர் சுரேஷ் மற்றும் தலைமை காவலர் வெங்கடாசலம் 12,000 ரூபாய் லஞ்சம் வாங்கியதாகப் புகார் எழுந்தது.
புகாரின் அடிப்படையில் இன்று காலை கிணத்துக்கடவு காவல் ஆய்வாளர் சுரேஷ் மற்றும் தலைமை காவலர் வெங்கடாசலத்தை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் ஆயுதபடைக்கு பணியிடை மாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்தார்.
இந்தநிலையில், மேற்கு மண்டல காவல்துறை துணைத் தலைவர் முத்துசாமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், விபத்து ஏற்படுத்தி கைது செய்யப்பட்ட ஓட்டுநரை ஜாமீனில் விடுவிக்க 12,000 ரூபாய் கையூட்டு பெற்ற கிணத்துக்கடவு காவல் நிலைய ஆய்வாளர் சுரேஷ் மற்றும் தலைமைக் காவலர் வெங்கடாசலம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யபட்ட நபரை ஜாமீனில் விடுவிக்க லஞ்சம் பெற்ற காவல் ஆய்வாளர் மற்றும் தலைமை காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் சக காவலர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.