கோவை: கட்டுமான பணிகளுக்கான அனுமதி தொடர்பாக, முறைகேடாக வசூல் செய்த ரூ.3.60 கோடியைத் திரும்ப வழங்க வேண்டும் என்று கோவை மாநகராட்சி அதிகாரிகள் மீது கட்டுமான நிறுவன நிர்வாக இயக்குநர் புகார் அளித்துள்ளார்.

கோவை தனியார் ஹோட்டலில் இமாமி ஏரோசிட்டி என்ற தனியார் கட்டுமான நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சோமசுந்தரம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியாதாவது:
‘‘கோவை காளப்பட்டி பகுதியில் 62 ஏக்கரில் கட்டுமான பணிகள் மேற்கொள்வதற்கு கோவை மாநகராட்சியில் அனுமதி கேட்டு இருந்தேன். அதற்கு நிலுவையில் உள்ள வரி 52 லட்ச ரூபாய் மற்றும் எதிர்கால பராமரிப்பு தொகை என 3 கோடியே 60 லட்சத்து 12 ஆயிரம் ஆகியவற்றை செலுத்தும்படி மாநகராட்சி அதிகாரிகள் கேட்டனர். மற்ற மாநகராட்சிகளில் எதிர்கால பராமரிப்பு தொகை இல்லாத்தால், அதை செலுத்த சென்னை உயர் நீதிமன்றத்தில் தடையுத்தரவு பெற்றேன். இந்தநிலையில் எதிர்கால பராமரிப்பு தொகையினை செலுத்த உயர் நீதிமன்றத்தில் தடை உத்தரவு வாங்கியதையும் மாநகராட்சி அதிகாரிகள் ஏற்காமல் இருந்த நிலையில், தேர்தல் அறிவிப்பு வெளியானதால் வேறு வழியின்றி 3 கோடியே 60 லட்சத்து 12 ஆயிரத்தை கருவூலத்தில் செலுத்தினேன். அதன் பில்களை காட்டிய பின்னர் மாநகராட்சி நிர்வாகம் சார்பாக பணி மேற்கொள்ள உத்தரவு நகல் மட்டுமே கிடைத்தது. இந்தநிலையில், 2.5 கோடி ரூபாய் கொடுத்துவிட்டு ஓரிஜினல் உத்தரவு ஆணையை வாங்கிக்கொள்ளும்படி அதிகாரிகள் தெரிவித்தனர்.
உத்தரவு நகலை கொடுக்காமல் இருக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். என்னிடம் முறைகேடாக வசூல் செய்த 3 கோடியே 60 லட்சத்து 12 ஆயிரத்தினை திரும்ப வழங்க வேண்டும். இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒரிஜினல் உத்தரவு நகலை வழங்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்துள்ளேன்'' என்று அவர் கூறினார்.