கோவையில் விபத்து ஏற்படுத்திய கார் ஓட்டுனரை ஜாமினில் விடுவிக்க லஞ்சம் பெற்ற காவல் ஆய்வாளர் மற்றும் தலைமை காவலர் ஆயுதப்படைக்கு மாற்றம்!

கோவை: கோவையில் விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுனரை ஜாமினில் விடுவிக்க லஞ்சம் பெற்ற கிணத்துக்கடவு காவல் ஆய்வாளர் மற்றும் தலைமை காவலர் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து மாவட்ட எஸ்பி உத்தரவிட்டார்.


கோவை: கோவையில் விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுனரை ஜாமினில் விடுவிக்க லஞ்சம் பெற்ற கிணத்துக்கடவு காவல் ஆய்வாளர் மற்றும் தலைமை காவலர் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து மாவட்ட எஸ்பி உத்தரவிட்டார்.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு சென்றான்பாளையம் பிரிவில் கடந்த 20ம் தேதி இரு சக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் முதியவர் உயிரிழந்தார்.

இதையடுத்து, விபத்தை ஏற்படுத்தி காரை ஓட்டி வந்த ஓட்டுனர் சுரேஷ் என்பவரை கிணத்துக்கடவு காவல்துறையினர் கைது செய்தனர்.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட கார் ஓட்டுனர் சுரேஷ் என்பவரை ஜாமினில் விடுவிக்க கார் உரிமையாளரிடம் கிணத்துக்கடவு காவல் நிலைய ஆய்வாளர் சுரேஷ் மற்றும் தலைமை காவலர் வெங்கடாசலம் ஆகியோர் 20 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்.

ஆனால் கார் உரிமையாளர் 12 ஆயிரம் ரூபாய் லஞ்சமாக தலைமை காவலர் வெங்கடாசலத்திடம் கொடுத்துள்ளார். அந்த பணத்தை தலைமை காவலர் வெங்கடாசலம் காவல் ஆய்வாளர் சுரேஷிடம் வழங்கியுள்ளார்.

இது குறித்து லஞ்சம் வழங்கிய கார் உரிமையாளர் காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்துள்ளார். பின்னர், புகாரின் அடிப்படையில் கிணத்துக்கடவு காவல் ஆய்வாளர் சுரேஷ் மற்றும் தலைமை காவலர் வெங்கடாசலத்திடம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் விசாரணை நடத்தியதில் லஞ்சம் பெற்றது உண்மை என்று தெரிய வந்தது.

இதையடுத்து, காவல் ஆய்வாளர் சுரேஷ் மற்றும் தலைமை காவலர் வெங்கடாசலத்தை இன்று கோவை ஆயுதப்படைக்கு பணியிடமாற்றம் செய்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபரை ஜாமினில் விடுவிக்க லஞ்சம் பெற்ற காவல் ஆய்வாளர் மற்றும் தலைமை காவலர் ஆயுதப் படைக்கு மாற்றம் செய்யப்பட்ட சம்பவம் சக காவலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...

கற்பகம் மருத்துவக்கல்லூரியில் 130 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

ஒத்தக்கல்மண்டபத்தில் உள்ள கற்பகம் மருத்துவக்கல்லூரி துணை சுகாதார அறிவியல் துறையின் இரண்டாம் பட்டமளிப்பு விழா நடைபெற்றது....

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...