கோவை: கோவையில் கந்தே கவுண்டர் சாவடி பகுதியில் வாகன சோதனையின்போது மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டதை தொடர்ந்து, போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
கோவை: கோவையில் கந்தே கவுண்டர் சாவடி பகுதியில் வாகன சோதனையின்போது மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டதை தொடர்ந்து, போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
கோவையில் கொரோனா காலகட்டத்தில் கஞ்சா மற்றும் போதை பொருள் மதுபானங்களை கடத்தி வந்த சம்பவங்கள் அதிகரித்து வருவதால் காவல்துறையினர் இரவு பகலாக தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே, கேரளாவில் கொரோனா ஊரடங்கு விலக்கி கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து தமிழக - கேரளா எல்லையான பாலக்காட்டில் இருந்து கோவைக்கு குடிமகன்கள் இருசக்கர வாகனங்களில் மதுபானங்களை வாங்கி வருகின்றனர்.
இந்த நிலையில், வாளையாறு எல்லையில் தமிழக சோதனைச் சாவடியான கந்தே கவுண்டர் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.