கோவை: கோவை ஊராட்சி தலைவருக்கு கொலை மிரட்டல் விடுத்த, அ.தி.மு.க., ஐ.டி., பிரிவு செயலாளர் சரண்டராக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுக்கரை அருகே உள்ள அரிசிபாளையத்தில், கடந்த 4ம் தேதி, சுகாதார பணியாளர்களுக்கு, ஊராட்சி சார்பில் உணவு வழங்கப்பட்டது.
அப்போது, அப்பகுதி அ.தி.மு.க., ஐ.டி., பிரிவு செயலாளர் மதுசூதனன், உணவு வழங்க விடாமல் தடுத்து ஊராட்சி தலைவருக்கு கொலை மிரட்டல் விடுத்தார். புகாரின் பேரில், மதுசூதனன் மீது போலீசார் வழக்கு பதிந்து தேடி வந்தனர்.
இந்நிலையில், முன்ஜாமின் கோரி, மாவட்ட செஷன்ஸ் கோர்ட்டில் மதுசூதனன் மனு தாக்கல் செய்தார். விசாரித்த நீதிபதி, நிபந்தனை முன்ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.
மேலும், 15 நாட்களுக்குள் மதுக்கரை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் சரண்டராகவும், ஊரடங்கு தளர்வுக்கு பிறகு, சம்பந்தப்பட்ட போலீஸ் ஸ்டேஷனில் ஆஜராகி, கையெழுத்திடவும் நிபந்தனை விதிக்கப்பட்டது.