கோவை: கோவையில் கொரோனா காலகட்டத்தில் கஞ்சா மற்றும் போதை பொருள் மதுபானங்களை கடத்தி வந்த சம்பவங்கள் அதிகரித்து வருவதால் காவல்துறையினர் இரவு பகலாக தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக, கோவை சிங்காநல்லூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஒண்டிபுதூர் சுங்கச்சாவடியில் காவலர்கள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், இதனை தடுக்கும் விதமாக மாநகர காவல் துறையினரை உஷார் செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநகரத்துக்கு வரும் வாகனங்கள் பலத்த சோதனைக்குப் பின்னரே மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால் பொதுமக்கள் அச்சமின்றி பாதுகாப்பாக வாழ்ந்து வருவதாக அப்பகுதி பொதுமக்கள் கூறினர். ஏதேனும் குற்றச் சம்பவங்கள் நடைபெற்றால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் தெரிவித்தனர்.
மேலும், கொரோனா நோய் தொற்று பரவாமல் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என காவல்துறை அறிவுரை வழங்கி வருகின்றனர். ஊர் சுற்றும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளனர்.