கோவை: கோவை மாநகராட்சியின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ராஜ கோபால் சுன்கரா இ.ஆ.ப., நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ராஜ கோபால் சுன்கரா இ.ஆ.ப., நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
கிழக்கு மண்டல பகுதியில் வீடு வீடாக சென்று சளி, காய்ச்சல், இருமல், உடல் வெப்பநிலை, ஆக்சிஜன் அளவை கண்டறியும் பணிகளில் ஈடுபடும் களப்பணியாளா்களுக்கு மாநகராட்சி ஆணையாளர் அறிவுரை வழங்கினார்.
கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் மாநகராட்சி ஆணையாளர் இன்று 22.06.2021 நேரில் பார்வையிட்டு, களப்பணியாளா்களின் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண்.62, 63க்குட்பட்ட சுகாதார ஆய்வாளர் அலுவலக வளாகத்தில் களப்பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று பொதுமக்களுக்கு சளி, காய்ச்சல், இருமல் பரிசோதனை, உடல் வெப்பநிலை கண்டறியும் வெப்பமானியைக் கொண்டு உடல் வெப்பநிலை பரிசோதனை, பல்ஸ் ஆக்ஸி மீட்டர் மூலம் உடல் ஆக்சிஜன் அளவை கண்டறிதல் ஆகிய பணிகளை மேற்கொள்ளும் களப்பணியாளர்களிடம் ஆணையாளார், ‘‘கொரோனா தடுப்புப்பணிகளில் களப்பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று பணியாற்றும் பணி மிக முக்கியப்பணியாகும். களப்பணியாளர்கள் பணி மேற்கொள்ளும்போது வீடு தவறாமல் வீட்டில் உள்ள அனைவருக்கும் பரிசோதனை செய்திட வேண்டும். அனைவரும் முகக்கவசம் அணிந்து பணியாற்ற வேண்டும், கிருமிநாசினி கொண்டு அடிக்கடி கைகளை சுத்தப்படுத்திட வேண்டும்.

அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்'' என அறிவுறுத்திய பின்னா், வார்டு எண்.57, மசக்காளிபாளையம், மகாலட்சுமி நகர் பகுதியில் சாலையோரங்களில் உள்ள குப்பை மேடுகளை அப்புறப்படுத்த நிர்ணயிக்கப்பட்ட தூய்மைப் பணிகளை (Mass Cleaning) தூய்மைப்பணியாளா்கள் பொக்லைன் இயந்திரம் மூலம் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருவதை ஆய்வு செய்து, தூய்மைப்பணியாளர்களிடம் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை மிக சிறப்பாக செய்திட வேண்டும், அனைவரும் முகக்கவசம் அணிந்து பணியாற்ற வேண்டும், அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.

தொடர்ந்து, வார்டு எண்.57க்குட்பட்ட உப்பிலிபாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட ஆணையாளர், காப்பிணி தாய்மார்கள், தாய் சேய்களுக்கு போடப்படும் தடுப்பூசிகள், சிகிச்சை முறைகள் குறித்தும், தாய் சேய் நல பாதுகாப்பு அட்டையில் பதிவு செய்து, பராமரிப்பது குறித்தும், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு திட்டத்தில் காப்பிணிகளுக்கு உதவித்தொகை வழங்கப்படுவது குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.

அதனைத் தொடர்ந்து, வார்டு எண்.63க்குட்பட்ட சிங்காநல்லார் நகா்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.75 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுவரும் கூடுதல் கட்டடத்தை ஆய்வு மேற்கொண்டு இப்பணிகளை விரைந்து முடிக்குமாறு தொடர்புடைய அலுவலா்களுக்கு உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின்போது, கிழக்கு மண்டல கண்காணிப்பு அலுவலா் பால்பிரின்ஸி ராஜ்குமார், நகர்நல அலுவலர் மரு.ராஜா, கிழக்கு மண்டல உதவி ஆணையாளா் முருகன், மண்டல சுகாதார அலுவலர் சந்திரன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.