நீலகிரி: கொரோனா பெருந்தொற்று ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், குன்னூர் காந்திபுரம் மக்கள் நிபந்தைகளுடன் வெளியே சென்று வர அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனாவால் தடைசெய்யப்பட்ட பகுதியில் இருந்து மைதானத்தில் கூடிய காந்திபுரம் மக்கள் நிபந்தனையுடன் வெளியே சென்றுவர அனுமதி அளிக்கப்படும் என்று சுகாதாரத் துறையினர் செவ்வாய்க் கிழமை கூறியதால், போராட்டம் கைவிடப்பட்டது. நீலகிரி மாவட்டம் குன்னூர் காந்திபுரம் பகுதியில் சுமார் ஐந்நூறுக்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த 800 பேர் வரை வசித்து வருகின்றனர். இங்கு வசிப்பவர்களில் பெரும்பாலும் சுமை தூக்கும் தொழிலாளர்கள், கேஸ் விநியோகம் செய்பவர்கள், கட்டுமான பணியில் அதிகமாக உள்ளவர்கள் ஆவர். இப்பகுதியில் 12 குடும்பங்களுக்கு கொரோனா பெருந்தொற்று ஏற்பட்டதால், 14 நாட்களுக்கு ஊர் முழுவதும் தடைசெய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது.

தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்ட அனைவரும் வீடு திரும்பியதால், தடை செய்யப்பட்ட பகுதியைச் சேர்ந்தவர்கள் வெளியே சென்றுவர அனுமதிக்க வேண்டும் என கூறி இப் பகுதி மக்கள் காந்திபுரம் பள்ளி வளாகத்தில் கூடினர்.

தகவல் அறிந்த குன்னூர் காவல் துணை கண்காணிப்பாளர் சுரேஷ் மற்றும் நகராட்சி ஆணையர் (பொறுப்பு) முருகானந்தம் உள்ளிட்ட அதிகாரிகள் காந்திபுரம் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பின்னர் நிபந்தனைக்கு உட்பட்ட தளர்வுகள் செய்து தரப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்ததால் பொது மக்கள் கலைந்து சென்றனர்.