கோவை: வால்பாறையில் அரசு நிலத்தில் புதிதாக ஒரு செட் அமைத்து அதில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த பெண்ணை கைது செய்ததோடு, 1.350 கிலோ கஞ்சாவையும் விற்பனை செய்த ரூபாய் 71 ஆயிரத்து 390 ரூபாய் ரொக்கத்தையும் போலீஸார் கைப்பற்றினர்.

கோவை மாவட்டம் வால்பாறை நகரை அடுத்த காமராஜ் நகர் பகுதியைச் சேர்ந்தவர் தாஸ் இவருடைய மனைவி முத்துலட்சுமி வயது 32. இவருடைய வீட்டுக்கு சிறிது தூரத்தில் அரசு நிலத்தில் புதிதாக ஒரு செட் அமைத்து இருந்தார். இதுபற்றி வருவாய் துறைக்கு புகார் வந்ததையடுத்து வட்டாட்சியர் ராஜா மற்றும் கிராம நிர்வாக அலுவலர் விஜய் அமிர்தராஜ் வால்பாறை காவல் ஆய்வாளர் மகேஸ்வரி ஆகியோர் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது வீட்டின் உள்புறம் ஆய்வு செய்தபோது விற்பனைக்காக கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, காவல் ஆய்வாளர் மகேஸ்வரி வீடு முழுவதும் சோதனையிட்டார். உள்ளே பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1.350 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது. மேலும், விற்பனை செய்த ரூபாய் 71 ஆயிரத்து 390 ரூபாய் ரொக்கத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டார்.

விசாரணைக்குப் பின் வால்பாறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறை காவலுக்கு அனுப்பப்பட்டார்.