கோவை: தமிழக, கேரள மாநில ஆளுநர்கள் உரையில், ஆனைமலையாறு, நல்லாறு அணைத்திட்டம் செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை: தமிழக, கேரள மாநில ஆளுநர்கள் உரையில், ஆனைமலையாறு, நல்லாறு அணைத்திட்டம் செயல்படுத்தப்படும் என தெரிவித்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. காலம் தாழ்த்தாமல் பேச்சு நடத்தி, உடனடியாக திட்டம் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, பி.ஏ.பி., விவசாயிகள் தெரிவித்தனர்.
கோவை, திருப்பூர் மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில், பரம்பிக்குளம் -- ஆழியாறு பாசன திட்டம் செயல்படுகிறது. இத்திட்டத்தில், ஆனைமலையாறு - நல்லாறு அணைத்திட்டம் செயல்படுத்தப்படாமல் உள்ளது. கேரள மாநிலத்தில், இடைமலையாறு அணை கட்டிய பின், ஆனைமலையாறு, நல்லாறு அணைகள் கட்ட வேண்டும் என்பது ஒப்பந்தம் ஆகும். இடைமலையாறு அணை கட்டப்பட்ட நிலையில், ஆனைமலையாறு, நல்லாறு அணைகள் கட்ட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பி.ஏ.பி., விவசாயிகள் வலியுறுத்தினர்.
மேலும், கடந்த ஆட்சியில் இருமாநில முதலமைச்சர்கள் சந்திப்புக்கு பின், பேச்சு நடத்த அதிகாரிகள் அளவிலான குழுக்கள் அமைக்கப்பட்டது. ஆட்சி மாற்றம் ஏற்பட்ட சூழலில், தி.மு.க., இத்திட்டத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து, நேற்று சட்டசபை கூட்டத்தொடர், கவர்னர் உரையில், ஆனைமலையாறு, நல்லாறு அணைத்திட்டம் செயல்படுத்த கேரள அரசுடன் பேச்சு துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், பி.ஏ.பி., விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதனையடுத்து, திருமூர்த்தி நீர்தேக்க திட்டக்குழு தலைவர் பரமசிவம் கூறுகையில், ''நீர் வளம் காக்க நீர்வளத்துறை அமைச்சகம் உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையை அரசு நிறைவேற்றியுள்ளது. வேளாண்துறைக்கு என தனி பட்ஜெட் அறிவிப்பு வரவேற்கத்தக்கது. பி.ஏ.பி., திட்டத்தில், ஆனைமலையாறு, நல்லாறு அணைகள் கட்டுவதற்கு பேச்சு வார்த்தை நடத்தப்படும் என்ற அறிவிப்பு, இரு மாநில சட்டசபையிலும் ஆளுநர் உரைகளில் இடம் பெற்றுள்ளது. இரு அரசுகளும் ஆர்வமாக இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இரு மாநில அரசுகளும், காலம் தாழ்த்தாமல் உடனடியாக பேச்சு நடத்தி இத்திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.