கோவை: குறு சிறு தொழில்கள் செயல்பட தடை தொடர்வதால் ஏமாற்றம் ஏற்பட்டுள்ளதாகக் கோவை தொழில் அமைப்புகள் கூட்டமைப்பினர் தங்களது குமுறலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எழுதியிருக்கும் கடிதத்தின் மூலம் தெரிவித்துள்ளனர்.

கோவை தொழில் அமைப்புகள் கூட்டமைப்பினர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எழுதி அனுப்பியிருக்கும் கடிதத்தில்,
‘‘தாங்கள் பொறுப்பேற்ற நாள் முதலாக அனைவரும் பாராட்டும் வகையில் மக்கள் நலத் திட்டங்களை அறிவித்து வருகிறீர்கள். தமிழக பொருளாதாரத்தின் அச்சாணியாக விளங்கும் குறு சிறு தொழில்கள் அனைத்தும் தங்கள் ஆட்சியில் பெரிதும் முன்னேறும் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறோம்.
தற்போது தமிழகத்தில் ஊரடங்கு 27.06.2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கோவை மாவட்டத்தில் குறு சிறு தொழில்கள் அனைத்தும் குறைந்த அளவு பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும் என எதிர்பார்த்தோம். பெரிய தொழிற்சாலைகள் அனைத்தும் ஊரடங்கு காலம் முழுவதும் தொடர்ந்து இயங்கி வரும் நிலையில், குறு சிறு தொழில்கள் மட்டும் மேலும் மேலும் முடக்கப்படுவது எங்களுக்கு ஏமாற்றத்தை அளிக்கிறது.
ஊரடங்கு தடையினால் குறு சிறு தொழில்களுக்கு ஏற்படும் இன்னல்கள்:
1. பெரும்பாலான குறு சிறுந்தொழில்கள் வாடகை கட்டடத்தில் இயங்கி வருகின்றன. வேலை செய்தாலும், செய்யாவிட்டாலும் வாடகை, வட்டி, மின்கட்டணம், கடன் தவணைகள் அனைத்தையும் கட்டியாக வேண்டும். தொழில் இயங்கமுடியாத நிலையில் மேற்படி செலவுகளை சமாளிக்க முடியாமல் திணறுகிறோம்.
2. எங்களை நம்பியுள்ள தொழிலாளர்கள் வேலை இல்லாமல் வருமானத்தை இழக்கும் நிலையில், அவர்களுக்கு ஏதாவது உதவி செய்யவேண்டிய கட்டாயம் எங்களுக்கு உள்ளது.
3. மஹாராஷ்டிரா, குஜராத், கர்நாடகா மாநிலங்களில் ஊரடங்கு காலத்திலும், தொழில்கள் அனைத்தும் செயல்பட அனுமதிக்கப்பட்டன. தற்போது டெல்லி, பஞ்சாப், உத்தரப்பிரதேசம் முதலிய மாநிலங்களிலும் தொழில்கள் செயல்பட ஆரம்பித்துள்ளன. கோவையில் மட்டும், குறு சிறு தொழில்கள் முடக்கப்படுவதால், நாங்கள் சந்தையை இழப்பது அதிகரிக்கும். தொழில்வளர்ச்சியில் தமிழகம் பின் தங்கும்.
4. சென்ற ஆண்டு கொரோனா பாதிப்பின் போதும், ஏற்கெனவே எவ்விதமான கடன் உதவியும் பெறாத குறு சிறு தொழில்களுக்கு, புதியதாக எந்த உதவியும் அறிவிக்கப்படவில்லை. தற்போதும் குறு சிறு தொழில்களுக்கு தனியாக கொரோனா கடன் உதவி எதுவும் அறிவிக்கப்படவில்லை.
5. ஏற்கெனவே ECLGS திட்டத்தின் கீழ் கடன் பெற்றவர்கள் மேலும் 10 சதவிகிதம் அளவுக்கு கடன் பெறலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. ஆனால், இதற்காக ரூ.46,000கோடி மட்டுமே ஒதுக்கியுள்ளது போதாது. புள்ளிவிவரங்கள் படி குறைந்தது ரூ.1.27 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்தால்தான், ஏற்கெனவே கடன் பெற்றவர்கள் அனைவரும் புதிய கடன் பெற முடியும்,
6. அத்தியாவசியப் பொருட்களை உற்பத்தி செய்யும் சில தொழிற்பிரிவுகள் ஊரடங்கின் போது செயல்பட அனுமதி உள்ளது. இருந்தாலும் கருவிகள் மற்றும் இடுபொருட்களை விற்கும் கடைகள் மூடப்பட்டுள்ளதால், அனுமதி உள்ள ஒருசில, குறு சிறு தொழில்களும் இயங்க முடிவதில்லை. 95 சதவிகிதம் தொழில்கள் மூடியே உள்ளன.
7. ஊரடங்கினால் எஃகு, வார்ப்பட இரும்பு, அலுமினியம், போன்ற மூலப்பொருட்கள் அனைத்தும் விற்கப்படவில்லை. சரக்குகள் வணிக வளாகங்களில் தேங்கி கிடக்கின்றன. ஆனால், டிமாண்ட் எதுவும் இல்லாத போதும், மூலப்பொருட்களின் விலை மட்டும் ஊரடங்கு காலத்திலும் தொடர்ந்து அதிகரிக்கும் அதிசயம் நம் நாட்டில் மட்டுமே நடக்கின்றது.
குறு சிறு தொழில்கள் மேலும் மேலும் அடிபட்டு, செய்வதறியாமல், வீழ்ந்து கிடக்கின்றன.
எங்கள் துயரங்களை கருத்தில்கொண்டு தமிழகம் முழுவதிலும் குறு சிறு தொழில்கள் அனைத்தும் 50 சதவிகித பணியாளர்களுடன் உடனடியாக இயங்க அனுமதிக்குமாறு, பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.
தொடர்ந்து 49 நாட்கள் குறு சிறு தொழில்கள் மூடப்பட்டுள்ளதால், குறைந்தது இரண்டு மாதங்களுக்கு மின் கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.'' என்று தெரிவித்துள்ளனர்.