நீலகிரி: உதகை அரசு தலைமை மருத்துவமனையில் டோக்கன் கொடுத்த 100 பேரில் 40 நபர்களுக்கு மட்டும் இன்று 2 ம் டோஸ் தடுப்பூசி செலுத்திவிட்டு வரிசையில் நின்றிருந்த மீதமுள்ள மக்களுக்கு தடுப்பூசி இல்லை என கூறியதால் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

நீலகிரி மாவட்டம் உதகை அரசு தலைமை மருத்துவமனையில் தடுப்பூசி செலுத்த வந்த நூறு நபர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், வழங்கப்பட்ட டோக்கனில் 40 பேருக்கு மட்டும் கோவிட் தடுப்பு ஊசி செலுத்திவிட்டு மீதமுள்ள மக்களுக்கு தடுப்பூசி இல்லை என கூறியதால் பொதுமக்கள் மருத்துவ ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மேலும், இது பற்றி அரசு மருத்துவமனை ஊழியர்களிடம் கேட்கும் பொழுது முறையான பதில் அளிப்பதில்லை என குற்றம் சாட்டினர்.
இது குறித்து தகவலறிந்து வந்த மருத்துவர்கள் கூறும் போது, ஆரம்ப சுகாதார நிலையத்திற்கும் மருந்துகளை அனுப்ப வேண்டியிருந்ததால் டோக்கன் கொடுத்த அனைவருக்கும் இன்று வழங்க முடியவில்லை என்றும் டோக்கன் பெற்றவர்களுக்கு மீண்டும் நாளை வழங்கப்படும் என்றனர். இதையடுத்து, பொது மக்கள் கலைந்து சென்றனர்.