வால்பாறையில் சிறுவனை தாக்கிய சிறுத்தை 2 மாதங்களாகியும் பிடிபடாததால் மக்கள் அச்சம்..!

கோவை: சிறுவனை தாக்கிய சிறுத்தை இரண்டு மாதங்களாகியும் பிடிபடாததால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்


கோவை: சிறுவனை தாக்கிய சிறுத்தை இரண்டு மாதங்களாகியும் பிடிபடாததால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்த சோலையார் எஸ்டேட்டில் இரண்டு வாரங்களுக்கு முன் சிறுத்தை தாக்கியதில் சிறுவன் ஒருவன் படுகாயம் அடைந்தான்.

இந்நிலையில், சோலையார் எஸ்டேட் பகுதியில் நடமாடும் சிறுத்தையை கூண்டு வைத்துப் பிடிக்க பொதுமக்கள் வலியுறுத்தியதை அடுத்து, சிறுவன் தாக்கப்பட்ட இடத்திலும், மற்றொரு இடத்திலும் இரண்டு இடங்களில் கூண்டு வைத்து சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டனர்.

மேலும், பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு கேமரா வைத்து கண்காணித்து வந்தனர். இதேபோல், வால்பாறை நகரில் சிறுத்தை நடமாட்டம் அதிகரித்துள்ளதால் இரண்டு இடங்களில் கூண்டு வைத்து பிடிக்க வனத்துறை நடவடிக்கை எடுத்தது. இரண்டு மாதங்கள் கடந்தும் சிறுத்தை, கண்காணிப்பு கேமராவில் சிக்காமலும், கூண்டில் சிக்காமலும் போக்கு காட்டி வருகிறது.

இதனால் அப்பகுதியில் உள்ள மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். அதேசமயம், வனத்துறையினர் இரவு பகலாக அப்பகுதியை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். வனத்துறையினர் தக்க நடவடிக்கை எடுத்து சிறுத்தையை பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...