கோவை: கோவை கொடிசியா வளாகத்தில் சர்வதேச யோகா தினத்தையொட்டி, கொரோனா நோயாளிகளுக்கு யோகாசன பயிற்சி மாவட்ட ஆட்சியர் சமீரன் நேரில் பார்வையிட்டு கொரோனா நோயாளிகளுடன் கலந்துரையாடினார்.
கோவை: கோவை கொடிசியா வளாகத்தில் சர்வதேச யோகா தினத்தையொட்டி, கொரோனா நோயாளிகளுக்கு யோகாசன பயிற்சி மாவட்ட ஆட்சியர் சமீரன் நேரில் பார்வையிட்டு கொரோனா நோயாளிகளுடன் கலந்துரையாடினார்.
சர்வதேச யோகா தினத்தையொட்டி, கோவை கொடிசியா வளாகத்தில் ஆயுர்வேதம் மற்றும் மருத்துவ குழுவினருடன் கோவிட்-19 வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 200க்கும் மேற்பட்ட நபர்களுக்கு யோகாசன பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
இதில் மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்களுடன் கலந்துரையாடினார்.
அதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசுகையில், இன்று சர்வதேச யோகாசன தினம். அதன் ஒரு பகுதியாக கோவை கொடிசியா வளாகத்தில் கோவிட்-19 வைரஸ் தொகுப்பு நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு யோகாசன பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு அவர்களுக்கு யோகாசன பயிற்சி அளிப்பதை பார்வையிட்டார்.
அதனைத்தொடர்ந்து, தமிழக அரசு நேற்றைய தினம் மூன்று வகையாக பிரித்து தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவை நீட்டித்து உத்தரவிட்டது. இதில் மூன்றாம் வகையில் கோவை மாவட்டம் உள்ளது. எந்தவித தடங்கலுமின்றி கடந்த வாரம் போன்றே ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கோவை மாவட்டத்தில் எந்தவித தளர்வுகளும் இன்றி முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. இதனைத்தொடர்ந்து இந்த ஊரடங்கு ஒருவாரத்திற்கு கடைபிடிக்கப்படும் என்றார்.