திருப்பூர்: திருப்பூரில் கொரோனா தடுப்பூசிக்காக பொதுமக்கள் அலைக்கழிக்கப்படுவதை தவிர்க்கும் வகையில் வாக்குச் சாவடியில் உள்ள வாக்காளர் பட்டியல் அடிப்படையில் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகிறது.

கொரோனா தொற்று இரண்டாவது அலை வேகமாக பரவி வந்த சூழ்நிலையில், உயிரிழப்பின் எண்ணிக்கையும் அதிகரித்து வந்தது. இச்சூழ்நிலையில் அவற்றை முறியடிக்க கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதே தீர்வு என மத்திய மாநில அரசுகள் சார்பில் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்த நிலையில், பொதுமக்கள் மத்தியில் தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கான ஆர்வம் அதிகரித்தது.
இந்நிலையில், திருப்பூர் மாவட்டத்திலும் அதிக மக்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வந்த சூழ்நிலையில் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் அதிக நேரம் காத்திருப்பது, அலைக்கழிக்கப்படுவது போன்ற சம்பவங்கள் நடைபெற்ற சூழ்நிலையில் அவற்றை தடுக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் வாக்குச்சாவடி வாரியாக தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டது.
அதன் அடிப்படையில், அந்தந்த வாக்குச் சாவடி மையங்களில் பொதுமக்களுக்கு டோக்கன் விநியோகம் செய்து குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட வாக்குச் சாவடியில் உள்ள வாக்காளர்கள் மட்டுமே கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டது.
இதன் மூலம், பொது மக்கள் அலைக்கழிக்கப்படுவதை தவிர்க்கும் வகையிலும் முன்கூட்டியே பொதுமக்களுக்கு தகவல் தெரிவிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. அந்த அடிப்படையில் இன்று பல்வேறு வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர் பட்டியல் அடிப்படையில் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
மேலும், இதனை கண்காணிக்கும் வகையில் சுகாதாரத் துறை அலுவலர்களோடு சேர்ந்து ஒவ்வொரு தடுப்பூசி மையத்திற்கும் ஒரு வருவாய் அலுவலரையும் நியமனம் செய்து மாவட்ட ஆட்சியர் வினீத் உத்தரவிட்டுள்ளார்.