கோவை: வால்பாறை பகுதியில் நடைபெற்று வரும் கொரோனா தடுப்பூசி முகாமுக்கு வருகை தந்த சுகாதாரத் துறை துணை இயக்குநர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

கோவை மாவட்டம் வால்பாறை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் சோலையார் அணைப் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் கோவை மாவட்டம் சஷம் அமைப்பு மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இணைந்து மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடும் சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. வால்பாறை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும் தடுப்பூசி முகாமை சுகாதாரத்துறை துணை இயக்குநர் செந்தில்குமார் திடீரென ஆய்வு மேற்கொண்டார்.

அங்கு பணியில் இருந்த மருத்துவர்கள், செவிலியர்கள், மாற்றுத் திறனாளிகள் நலத் துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்களிடம் பணிகள் பற்றி கேட்டறிந்தார். இந்த ஆய்வின் போது வால்பாறை வட்டார வளமைய தலைமை மருத்துவர் பாபு லட்சுமணன், மருத்துவர்கள், செவிலியர்கள், மாற்றுத் திறனாளிகள் நலத் துறை அலுவலர்கள் உள்பட ஏராளமானவர்கள் இருந்தனர்.