கோவை: கோவை மாவட்டம், கிணத்துக்கடவு தொகுதிக்குட்பட்ட மதுக்கரை அரசு மேல்நிலைப் பள்ளியில் கொரோனா தடுப்பூசி போடும் பணியை திமுக பொறுப்புக் குழு உறுப்பினர் குறிச்சி பிரபாகரன் மேற்பார்வையிட்டு வருகிறார்.

கோவை மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசுப் பள்ளிகளில் தடுப்பூசி மையங்களை அமைத்து கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, கிணத்துக்கடவு தொகுதிக்குட்பட்ட மதுக்கரை அரசு மேல்நிலைப்பள்ளியில் இன்று கொரோனா தடுப்பூசி மையம் தொடங்கப்பட்டுள்ளது. அப்பகுதியை சேர்ந்த 18 வயதிலிருந்து 45 வயதுக்கு உட்பட்டவர்கள் காலை முதலே கொரோனா தடுப்பூசி போட ஆர்வம் காட்டி நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.
இந்த நிலையில், மதுக்கரை அரசு மேல்நிலைப் பள்ளியில் கொரோனா தடுப்பூசி போடும் பணியை கோவை கிழக்கு மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர் குறிச்சி பிரபாகரன் பார்வையிட்டு தடுப்பூசி போடும் பணியை துரிதப்படுத்தினார்.

இதேபோல், குறிச்சி பகுதி 94வது வார்டுக்கு உட்பட்ட மாச்சம்பாளையம் ஆறுமுக கவுண்டர் வீதியில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று மாநகராட்சி அதிகாரிகளின் உதவியுடன் அப்பகுதியில் குவிந்து கிடந்த குப்பைகளை அகற்றி கிருமிநாசினி தெளிக்கும் பணி நடைபெற்றது.

இந்த பணியை கோவை கிழக்கு மாவட்ட திமுக பொறுப்புக் குழு உறுப்பினர் குறிச்சி பிரபாகரன் பார்வையிட்டார்.

இதில் மாநகராட்சி அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.