வேலியே பயிரை மேய்ந்த கதையாக தன்னிடம் வேலை செய்த ஊழியரின் மனைவியை பலாத்காரம் செய்த பேக்கரி உரிமையாளர்!

கோவை: வேலியே பயிரை மேய்ந்த கதையாக தன்னிடம் வேலை செய்த ஊழியரின் மனைவியை பலாத்காரம் செய்த பேக்கரி உரிமையாளர் போலீசார் சுற்றிவளைத்துள்ளனர்.


கோவை: வேலியே பயிரை மேய்ந்த கதையாக தன்னிடம் வேலை செய்த ஊழியரின் மனைவியை பலாத்காரம் செய்த பேக்கரி உரிமையாளரை போலீசார் சுற்றிவளைத்துள்ளனர்.

கோவையை அடுத்த அன்னூர் அருகே உள்ள பசூரில் கேரளாவைச் சேர்ந்த மொய்தீன் குட்டி உட்பட 3 பேரால் ஒரு பேக்கரி நடத்தப்பட்டு வருகிறது. இந்த பேக்கரியில் வேலைக்காக ஒரு மாதத்திற்கு முன்பு கணவருடன், 21வயது இளம்பெண் வந்துள்ளார். கொரோனா காரணமாக பேக்கரி மூடப்பட்டதால், அந்த பெண்ணின் கணவர் அருகே மில் ஒன்றில் பணிக்கு சென்றுள்ளார்.

மேலும், பேக்கரி உரிமையாளர் கேரளாவில் உள்ள தனது தோட்டத்தில் வேலை தருவதாக கூறி கணவன், மனைவி இருவரையும் பேக்கரி அருகே உள்ள வீட்டில் தங்க வைத்துள்ளார்.

இந்நிலையில், கணவர் வேலைக்கு சென்றதை பயன்படுத்தி, பேக்கரி உரிமையாளர்களான மொய்தீன் குட்டி(40), சமீர் மற்றும் சிகாபுதீன் ஆகியோர் வீட்டில் தனியாக இருந்த இளம்பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

மேலும், இந்த சம்பவம் தொடர்பாக வெளியே சொன்னால் கணவரை கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்துள்ளனர். தொடர்ந்து, மற்றொரு முறையும் அப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதனால், அப்பெண்ணின் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, இளம்பெண் நடவடிக்கையில் மாற்றம் இருந்ததால் சந்தேகமடைந்த கணவர் விசாரித்துள்ளார். அப்போது அப்பெண், 3 பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததைத் தெரிவித்துள்ளார்.

பின்னர், இதுகுறித்து துடியலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கணவர் அளித்த புகாரின் அடிப்படையில், பேக்கரி உரிமையாளர்களான பாலக்காட்டை சேர்ந்த சமீர் (28) மற்றும் சிகாபுதீன் (29) ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள பேக்கரி உரிமையாளர் மொய்தீன் குட்டியை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Newsletter

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...

கற்பகம் மருத்துவக்கல்லூரியில் 130 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

ஒத்தக்கல்மண்டபத்தில் உள்ள கற்பகம் மருத்துவக்கல்லூரி துணை சுகாதார அறிவியல் துறையின் இரண்டாம் பட்டமளிப்பு விழா நடைபெற்றது....

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...