கோவை: கோவை மாநகராட்சி வடக்கு மண்டலப் பகுதிகளில் நடைபெற்றுவரும் கொரோனா தடுப்புப் பணிகள் மற்றும் தூய்மைப்பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
கோவை: கோவை மாநகராட்சி வடக்கு மண்டலப் பகுதிகளில் நடைபெற்றுவரும் கொரோனா தடுப்புப் பணிகள் மற்றும் தூய்மைப்பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
கோவை மாநகராட்சி வடக்கு மண்டலப் பகுதிகளில் நடைபெற்றுவரும் கொரோனா தடுப்புப் பணிகள் மற்றும் தூய்மைப்பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டபோது, அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும், தடுப்பூசி போட வேண்டுமென வேண்டுகோள் விடுத்தார்.

கோவை மாநகராட்சியில் வடக்கு மண்டல பகுதிகளில் கொரோனா தடுப்புப் பணிகள் மற்றும் தூய்மைப் பணிகள் (Mass Cleaning) நடைபெற்று வருவதை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ராஜ கோபால் சுன்கரா இ.ஆ.ப., இன்று 18.06.2021 ஆய்வு மேற்கொண்டார்.
வடக்கு மண்டலம் வார்டு எண்.38, பீளமேடு, பயணியர் மில் சாலையில் உள்ள சுகாதார அலுவலக வளாகத்தில் மாநகராட்சிப் பகுதிகளில் தூய்மைப்பணிகளை மேற்கொள்ளும் தூய்மைப்பணியாளா்களிடம், மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலர் தெரிவிக்கையில், ‘‘தூய்மைப்பணியாளர்கள் நேரம் தவறாமல் பணிக்கு வருகை தர வேண்டும். தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை மிக சிறப்பாக செய்திட வேண்டும். வீடுகள்தோறும் சேகரிக்கப்படும் குப்பைகளைத் தரம் பிரித்து மக்கும் குப்பை, மக்கா குப்பை என சேகரிக்கப்பட வேண்டும், அனைவரும் முகக்கவசம் அணிந்து பணியாற்ற வேண்டும், அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்'' என அறிவுறுத்தினார்.

தொடர்ந்து, வடக்கு மண்டலம், சரவணம்பட்டி சுகாதார பிரிவு அலுவலக வளாகத்தில் வார்டு எண்.28 முதல் 31வரை உள்ள பகுதிகளில் களப்பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று சளி, காய்ச்சல், இருமல் பரிசோதனை, உடல் வெப்பநிலை பரிசோதனை, பல்ஸ் ஆக்ஸி மீட்டர் மூலம் உடல் ஆக்சிஜன் அளவைக் கண்டறிந்த பணிகளின் விவரங்கள் குறித்து கேட்டறிந்த ஆணையாளர், ‘‘களப்பணியாளர்கள் பணிகளை மேற்கொள்ளும்போது வீட்டில் உள்ள அனைவருக்கும் பரிசோதனை செய்ய வேண்டும். பணியில் ஈடுபடும் பொழுது முகக்கவசம் அணிந்தும், அடிக்கடி கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தப்படுத்திட வேண்டும். அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேவேண்டும்'' என அறிவுறுத்தினார்.
தூய்மைப்பணிகள் (Mass Cleaning) ஆய்வு:

அதனைத் தொடர்ந்து, வடக்கு மண்டலம் வார்டு எண்.42, உடையாம்பாளையம் சாலை பகுதியில் தூய்மைப்பணியாளர்கள் சாலையோரங்களில் உள்ள குப்பை மேடுகளை அப்புறப்படுத்த நிர்ணயிக்கப்பட்ட தூய்மைப் பணிகளையும் (Mass Cleaning) தொடர்ந்து, வார்டு எண்.4 அப்பநாயக்கன்பாளையம், கலைஞர் நகர் பகுதியில் தூய்மைப்பணியாளர்கள் சாலையோரங்களில் உள்ள குப்பை மேடுகளை அப்புறப்படுத்த நிர்ணயிக்கப்பட்ட தூய்மைப் பணிகளையும் (Mass Cleaning) ஈடுபட்டு வரும் பணிகள் நடைபெற்றுவருவதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அதனைத் தொடாந்து மத்திய மண்டலம் வார்டு எண்.72, வ.ஊ.சி. உயிரியல் பூங்காவில் ஆய்வு மேற்கொண்ட ஆணையாளர், உயிரியல் பூங்காவிலுள்ள பறவைகள் மற்றும் விலங்குகளுக்கு வழங்கப்படும் உணவு முறைகள் குறித்தும், பராமரிப்பு முறைகள் குறித்தும் கேட்டறிந்தார்.

இந்த ஆய்வின்போது, மாநகரப்பொறியாளர் ஆ.லட்சுமணன், வடக்கு மண்டல கொரோனா கண்காணிப்பு அலுவலர் திருமதி மேனகா, வடக்கு மண்டல உதவி ஆணையாளர் மோகனசுந்தரி, வ.ஊ.சி. உயிரியல் பூங்கா இயக்குநர் மரு.ஏ.செந்தில்நாதன், உதவி செயற்பொறியாளா்கள் கருப்புசாமி, செந்தில்பாஸ்கர், மண்டல சுகாதார அலுவலர் இராமச்சந்திரன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.




