கோவை: கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சுகாதாரத்தைப் பேணிக்காக்கும் வகையில் நீண்ட நாட்கள் தேங்கக்கூடிய கழிவுகள், குப்பைகளை அகற்ற தீவிர தூய்மைப்பணிகள் (Mass Cleaning) மாநகராட்சியில் உள்ள ஐந்து மண்டலங்களில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

கோவை மாநகராட்சிக்குட்பட்ட ஐந்து மண்டலங்களில் உள்ள 100 வார்டுகளிலும் நாள்தோறும் தூய்மைப் பணிகள் நடைபெற்று வருகின்றன. தூய்மைப் பணியாளா்கள் வீடுதோறும் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து சேகரித்து வருகின்றனர்.

இந்தத் தூய்மைப் பணிகளை மேலும் தீவிரப்படுத்தும் வகையில் மாநகராட்சியின் அனைத்து பகுதிகளிலும் ஏற்கெனவே நீண்ட நாட்களாகத் தேங்கிக் கிடக்கும் குப்பைகள் மண்டல வாரியாகக் கண்டறியப்பட்டு தூய்மைப் பணிகள் (Mass Cleaning) மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன்படி, இன்று 18.06.2021 கிழக்கு மண்டலம் வார்டு எண்.63 ஸ்ருதி அப்பார்ட்மெண்ட் கட் ரோடு, தனலட்சுமிபுரம், பழமுதிர் நிலையம் கட் ரோடு, மேற்கு மண்டலம் வார்டு எண்.6 லேண்ட் மார்க் சிட்டி ரோடு, வார்டு எண்.14 அம்பேத்கர் வீதி, வார்டு எண்.22 புரூக் பீல்டு சாலை, வடக்கு மண்டலம் வார்டு எண்.31 சக்தி ரோடு, வார்டு எண்.ஏ கலைஞர் நகா், வார்டு எண்.42 உடையாம்பாளையம், தெற்கு மண்டலம் வார்டு எண்.79 ராபாட்சன் ரோடு, வார்டு எண்.97 ஐயப்பன் கோயில் வீதி, வார்டு எண்.86 லாரி பேட்டை, மத்திய மண்டலம் வார்டு எண்.74 நான்கு முக்கு ரோடு, ரேம்ப் ரோடு பகுதி-1, வார்டு எண்.84 கெம்பட்டி காலனி ஆகிய பகுதிகளில் தூய்மைப்பணியாளர்கள் மூலம் சாலையோரங்களில் உள்ள குப்பைகளை அகற்றி தூய்மைப்படுத்தும் பணிகள் நடைபெற்றன.