கோவை: கட்டுமான தொழிலாளர்களுக்கு கொரோனா ஊரடங்கு பேரிடர்கால உதவி தொகை வழங்க வேண்டும் என சிஐடியு கட்டுமான தொழிலாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
கோவை: கட்டுமான தொழிலாளர்களுக்கு கொரோனா ஊரடங்கு பேரிடர்கால உதவி தொகை வழங்க வேண்டும் என சிஐடியு கட்டுமான தொழிலாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து சிஐடியுவின் கோவை மாவட்ட கட்டிடம் கட்டும் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கே.மனோகரன் தமிழ்நாடு முதலமைச்சருக்கு எழுதியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது, தமிழகத்தில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக அதிகமான தொழிலாளர்கள் பணியாற்றுவது கட்டுமானத்துறையாகும். இந்த கொரோனா தொற்று பரவாமல் தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வரும் இக்காலத்தில் கட்டுமானத் தொழிலாளர்கள் வேலை இழந்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
கட்டுமான தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை பாதுகாத்திட, இந்த பேரிடர் காலத்தில் தலா 3,000 நிவாரணமாக வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இந்த ஊரடங்கு, தற்போது சில தளர்வுகள் ஏற்படும் நிலையில் கட்டுமான தொழிலுக்கு தேவையான மூலப் பொருட்களான சிமெண்ட், கம்பி ஜல்லி, மணல், எம்-சாண்ட் உள்ளிட்ட பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால், பொதுமக்களும் கட்டுமான தொழிலாளர்களும் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.
தாங்கள் தலையிட்டு கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறோம்.
தமிழக மக்கள் மற்றும் கட்டுமான தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.