கோவை: கோவை அருகே பூட்டிய வீட்டின் கதவை உடைத்து அதிகாலை திருட்டில் ஈடுபட்ட நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை ரத்தினபுரி தண்டுமாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் ராமர் 31, தொழிலாளி. இவர் 2 நாட்களுக்கு முன்பு இரவு, வீட்டின் மொட்டைமாடியில் தூங்கச் சென்றுள்ளார். வீட்டின் முதல் தளத்தில் உள்ள அறையில் குடும்பத்தினர் தங்கியுள்ளனர்.
அப்போது, அதிகாலை வீட்டின் உள்ளே சத்தம் கேட்டதால் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் கீழே வந்து பார்த்தபோது முன் பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது. உடனே, உள்ளே சென்று பார்த்தபோது அங்கிருந்த ஒரு லேப்டாப் இரண்டு மொபைல் போன்கள் 2,800 ரூபாய் உள்ளிட்டவை திருடு போயிருப்பது தெரிய வந்தது.
இதுகுறித்து ரத்தினபுரி போலீசில் புகார் அளித்தனர். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.