கோவை: கொரோனா பெருந்தொற்றைத் தடுக்கும் நடவடிக்கையாக வால்பாறையில் தடுப்பூசி போடும் சிறப்பு முகாம் நடைபெற்றது. கொட்டும் மழையிலும் மக்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

கோவை மாவட்டம் வால்பாறையில் கொரோனா தடுப்பூசி போடும் சிறப்பு முகாம் நடைபெற்றது. வால்பாறை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற முகாமில் தடுப்பூசி போடும் பணி நடைபெற்றது. முன்னதாக பயனாளிகளின் ஆதார் கார்டு சரிபார்ப்பு செய்த பின்னர் விண்ணப்பம் நிரப்பப்பட்டது. தொடர்ந்து தடுப்பூசி போடப்பட்டது. 45 வயதுக்கு மேற்பட்ட ஆண், பெண் இருபாலரும் ஆர்வத்துடன் தடுப்பூசி போட்டுக்கொண்டனர். வால்பாறை 250. டாடா எஸ்டேட் 204. பிபிடிசி 204. பாரி அக்ரோ 204. உட்பிரையர் 204. டான்டீ 120. பி கே டி 120. வாட்டர் பால் 72. அய்யர்பாடி 72 ஆக மொத்தம் ஆயிரத்து 450 பேர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது.
இம்முகாமில் வால்பாறை, வட்டார வள மைய தலைமை மருத்துவர் பாபு லக்ஷ்மன் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் மற்றும் செவிலியர்கள் தேயிலைத் தோட்ட மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் உட்பட ஏராளமான பொதுமக்கள் தொழிலாளர்கள் கொட்டும் மழையைப் பொருட்படுத்தாது ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.