மிருகங்களுக்கு கொரோனா பாதிப்பை தடுக்க மாநில அளவில் சிறப்பு கண்காணிப்பு குழு அமைப்பு

கோவை: சமீபத்தில் மிருகங்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருவதை தொடர்ந்து மாநில அளவிலான சிறப்பு கண்காணிப்பு குழுவை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.


கோவை: சமீபத்தில் மிருகங்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருவதை தொடர்ந்து மாநில அளவிலான சிறப்பு கண்காணிப்பு குழுவை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது "கொரோனா நோய் தொற்றின் காரணமாக காடுகள், புலிகள் சரணாலயங்கள், தேசிய பூங்காக்கள் மற்றும் வனவிலங்கு சரணாலயங்களில் உள்ள விலங்குகளுக்கு மேற்கண்ட நோய்த்தொற்றுகளைத் தடுக்கவும், குறைக்கவும் மற்றும் மேற்கண்ட பணிகளில் ஈடுபடும் அலுவலர்களுக்கு வழிகாட்டுதல்களை வழங்க, தமிழக அரசு, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை முதன்மைச் செயலாளர் சுப்ரியா சாகு இ.ஆ.ப. தலைமையில் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் (துறைத்தலைவர்), முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் மற்றும் தலைமை வன உயிரினக் காப்பாளர், சிறப்பு செயலாளர் (வனம்), சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையின் கூடுதல் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் இயக்குநர், மேம்படுத்தப்பட்ட வன உயிரின பாதுகாப்பு நிறுவனம் ஆர்.சுந்தரராஜூ இ.வ.ப. ஓய்வு), முன்னாள் முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் மற்றும் தலைமை வன உயிரினக் காப்பாளர் மற்றும் தியடோர் பாஸ்கரன், வனவிலங்கு பாதுகாவலர் ஆகியோர்களை உள்ளடக்கிய ஆறு உறுப்பினர்களைக் கொண்ட மாநில அளவிலான பணிக்குழு (State Level Task Force) ஒன்றினை அமைத்துள்ளது.

இப்பணிக்குழு நோயின் பரவலைக் கண்காணித்தல், தடுப்பூசி வழங்குதல் மற்றும் தொடர்புடைய துறைகளின் பணிகளை உன்னிப்பாகக் கண்காணித்து தொடர் அறிக்கையினைச் சமர்ப்பிக்கும்." இவ்வாறு அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...

கற்பகம் மருத்துவக்கல்லூரியில் 130 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

ஒத்தக்கல்மண்டபத்தில் உள்ள கற்பகம் மருத்துவக்கல்லூரி துணை சுகாதார அறிவியல் துறையின் இரண்டாம் பட்டமளிப்பு விழா நடைபெற்றது....

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...