கோவை கே.ஜி. மருத்துவமனைக்கு வெளிநாட்டு வாழ்‌ தமிழர்‌கள் குழு உதவி..!

கோவை: கொரோனா பெருந்தொற்றின் இரண்டாம் அலைப் பரவலின் கடும் சூழலில் கோவை கே.ஜி. மருத்துவமனையின் சேவையை அறிந்து, இங்கிலாந்தில்‌ வாழும்‌ ஒரு தமிழர்‌ கோவை மாவட்ட மக்களுக்கு உதவி செய்யவேண்டும்‌ என்ற நோக்கோடு கே.ஜி. மருத்துவமனைக்கு உதவிகள் செய்துள்ளார்.



கோவை: கொரோனா பெருந்தொற்றின் இரண்டாம் அலைப் பரவலின் கடும் சூழலில் கோவை கே.ஜி. மருத்துவமனையின் சேவையை அறிந்து, இங்கிலாந்தில்‌ வாழும்‌ ஒரு தமிழர்‌ கோவை மாவட்ட மக்களுக்கு உதவி செய்யவேண்டும்‌ என்ற நோக்கோடு கே.ஜி. மருத்துவமனைக்கு உதவிகள் செய்துள்ளார்.

கொரோனா பெருந்தொற்றின் பேரிடர்‌ காலத்தில் உலகில்‌ உள்ள பல நாட்டு மக்கள்‌ மிகவும்‌ கடுமையான சூழலை எதிர்கொண்டு வருகின்றனர்‌. முக்கியமாகக் கோவை மாவட்ட மக்கள் அதிகம்‌ பாதிக்கப்பட்டு உள்ளனர்‌.

அரசு மருத்துமனையும்‌, அரசு நிர்வாகமும்‌ மிகவும்‌ ௮க்கறையுடன்‌ பாடுபட்டு இந்தக் கொரோனா பெருந்தொற்றைக் கட்டுக்குள்‌ கொண்டு வந்தனர்‌. இதில்‌ கே.ஜி. மருத்துவமனையின்‌ பங்கு பாராட்டுக்குரியது.

இந்தநிலையில், கொரோனா பெருந்தொற்றின் இரண்டாம் அலைப் பரவலின் கடும் சூழலில் கோவை கே.ஜி. மருத்துவமனையின் சேவையை அறிந்து, இங்கிலாந்தில்‌ வாழும்‌ ஒரு தமிழர்‌ கோவை மாவட்ட மக்களுக்கு உதவி செய்யவேண்டும்‌ என்ற நோக்கோடு கே.ஜி. மருத்துவமனைத் தொடர்பு கொண்டு உதவிகள் முன் வந்தார்‌.

தமிழ்‌ மக்கள்‌ கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் நேரத்தில்‌ இங்கிலாந்து நாட்டில்‌ வாழும்‌ தமிழர்‌ டாக்டர் ராஜா நடராஜன்‌, டேவிட்‌ கெஷில்‌ ஆகியோர் கருணையோடு தங்களின்‌ குழுவுடன்‌ இணைந்து நிதி திரட்டி, ஆயிரக்கணக்கான மருத்துவர்கள்‌ மற்றும்‌ மருத்துவக் குழுவினருக்குத் தேவையான முகக்கவசம்‌ மற்றும் மருத்துவ உதவிகளை Allience Medicals, Oxford பல்கலைக்கழக டாக்டர்‌ ராஜா நடராஜன்‌, டேவிட்‌ கெஷில்‌ குழு மூலம்‌ கே.ஜி. மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்‌. 



இதனைப் பெற்றுக்‌ கொண்ட மருத்துவமனையின்‌ தலைவர்‌ Dr. G.பக்தவத்சலம்‌, கே.ஜி. மருத்துவமனையின்‌ சார்பில்‌ இங்கிலாந்து வாழ் தமிழர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்‌.

Newsletter

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...

கற்பகம் மருத்துவக்கல்லூரியில் 130 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

ஒத்தக்கல்மண்டபத்தில் உள்ள கற்பகம் மருத்துவக்கல்லூரி துணை சுகாதார அறிவியல் துறையின் இரண்டாம் பட்டமளிப்பு விழா நடைபெற்றது....

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...