கோவை: கொரோனா பெருந்தொற்றின் இரண்டாம் அலைப் பரவலின் கடும் சூழலில் கோவை கே.ஜி. மருத்துவமனையின் சேவையை அறிந்து, இங்கிலாந்தில் வாழும் ஒரு தமிழர் கோவை மாவட்ட மக்களுக்கு உதவி செய்யவேண்டும் என்ற நோக்கோடு கே.ஜி. மருத்துவமனைக்கு உதவிகள் செய்துள்ளார்.
கோவை: கொரோனா பெருந்தொற்றின் இரண்டாம் அலைப் பரவலின் கடும் சூழலில் கோவை கே.ஜி. மருத்துவமனையின் சேவையை அறிந்து, இங்கிலாந்தில் வாழும் ஒரு தமிழர் கோவை மாவட்ட மக்களுக்கு உதவி செய்யவேண்டும் என்ற நோக்கோடு கே.ஜி. மருத்துவமனைக்கு உதவிகள் செய்துள்ளார்.
கொரோனா பெருந்தொற்றின் பேரிடர் காலத்தில் உலகில் உள்ள பல நாட்டு மக்கள் மிகவும் கடுமையான சூழலை எதிர்கொண்டு வருகின்றனர். முக்கியமாகக் கோவை மாவட்ட மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
அரசு மருத்துமனையும், அரசு நிர்வாகமும் மிகவும் ௮க்கறையுடன் பாடுபட்டு இந்தக் கொரோனா பெருந்தொற்றைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதில் கே.ஜி. மருத்துவமனையின் பங்கு பாராட்டுக்குரியது.
இந்தநிலையில், கொரோனா பெருந்தொற்றின் இரண்டாம் அலைப் பரவலின் கடும் சூழலில் கோவை கே.ஜி. மருத்துவமனையின் சேவையை அறிந்து, இங்கிலாந்தில் வாழும் ஒரு தமிழர் கோவை மாவட்ட மக்களுக்கு உதவி செய்யவேண்டும் என்ற நோக்கோடு கே.ஜி. மருத்துவமனைத் தொடர்பு கொண்டு உதவிகள் முன் வந்தார்.
தமிழ் மக்கள் கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் நேரத்தில் இங்கிலாந்து நாட்டில் வாழும் தமிழர் டாக்டர் ராஜா நடராஜன், டேவிட் கெஷில் ஆகியோர் கருணையோடு தங்களின் குழுவுடன் இணைந்து நிதி திரட்டி, ஆயிரக்கணக்கான மருத்துவர்கள் மற்றும் மருத்துவக் குழுவினருக்குத் தேவையான முகக்கவசம் மற்றும் மருத்துவ உதவிகளை Allience Medicals, Oxford பல்கலைக்கழக டாக்டர் ராஜா நடராஜன், டேவிட் கெஷில் குழு மூலம் கே.ஜி. மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனைப் பெற்றுக் கொண்ட மருத்துவமனையின் தலைவர் Dr. G.பக்தவத்சலம், கே.ஜி. மருத்துவமனையின் சார்பில் இங்கிலாந்து வாழ் தமிழர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்.