கோவை: பொள்ளாச்சியில் மருத்துவர்கள் பாதுகாப்புச் சட்டத்தை இயற்றக் கோரி இந்திய மருத்துவ சங்கத்தினர் கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உத்தரபிரதேசம், பீகார், கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் மருத்துவர்கள் மற்றும் முன் களப்பணியாளர்கள் மீது தாக்குதல் நடத்தும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது
கொரோனா காலத்தில் உயிரை பணயம் வைத்து பணியாற்றும் மருத்துவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதலை கண்டித்து இன்று நாடு முழுவதும் மருத்துவர்கள் ஒரு நாள் அடையாள போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதன் ஒரு பகுதியாக, பொள்ளாச்சியில் உள்ள இந்திய மருத்துவர்கள் சங்கம் சார்பில் மருத்துவர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஆட்சிக்காலத்தில் மருத்துவ துறையினருக்கு எதிரான வன்முறை மற்றும் பொருள் சேதம் ஆகியவற்றை தடுக்க அரசாணை வெளியிடப்பட்டு முறையாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
எனவே, மருத்துவர்கள் மீதான தாக்குதலை தடுத்து நிறுத்தும் வகையில் மத்திய அரசு உடனடியாக மருத்துவர்கள் பாதுகாப்பு சட்டத்தை கொண்டு வர வேண்டும், மருத்துவர்களுக்கும் மருத்துவமனைகளுக்கும் நிலையான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் மருத்துவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.