திருப்பூர் மாவட்ட காவல் துறை சார்பில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு ஆக்சிஜன் செறிவூட்டர்கள் அர்ப்பணிப்பு..!

திருப்பூர்: திருப்பூர் மாவட்ட காவல் துறை சார்பாக, திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு ஆக்சிஜன் செறிவூட்டர்கள் மாநில செய்தித் துறை அமைச்சர் மூலமாக வழங்கப்பட்டது..


திருப்பூர்: திருப்பூர் மாவட்ட காவல் துறை சார்பாக, திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு ஆக்சிஜன் செறிவூட்டர்கள் மாநில செய்தித் துறை அமைச்சர் மூலமாக வழங்கப்பட்டது.

திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாவட்ட காவல் துறை சார்பாக ஒரு நிமிடத்திற்கு 5 லிட்டர் ஆக்சிஜனை செறிவூட்டக் கூடிய திறன் கொண்ட 10 ஆக்சிஜன் சிலிண்டர்களை திருப்பூர் மாவட்ட காவல் துறை சார்பாக திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அர்ப்பணிக்கும் நிகழ்வு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்றது.

திருப்பூர் மாவட்ட காவல் துறை சார்பாக வழங்கப்பட்ட ஆக்சிஜன் சிலிண்டர்களை செய்தித்துறை அமைச்சர் மூலமாக மாவட்ட நிர்வாகத்திற்கு வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், விரைவில் திருப்பூர் மாவட்டம் கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக மாறும் எனவும் அதற்கு பொதுமக்கள் முகக்கவசம், சமூக இடைவெளி உள்ளிட்ட சுகாதாரத் துறையின் அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளையும் முறையாக பின்பற்ற வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

இந்நிகழ்ச்சியில், கோவை மண்டல காவல்துறை தலைவர் சுதாகர், மாவட்ட ஆட்சியர் வினீத், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசாங் சாய் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...