கோவை: ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கோவை மாவட்டத்தில் கட்டுப்பாடுகள் நீடிக்கும் எனவும் விதிமுறைகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கைகள் தொடரும் என்று மாவட்ட ஆட்சியர் சமீரன் தெரிவித்தார்.

கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் இன்று பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடங்களை ஆய்வு செய்தார். மேலும், கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியின்போது, கோவை மாவட்டத்தில் மே மாதம் முதல் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4000க்கும் மேற்பட்டவர்களாக, அதாவது 38 விழுக்காடு இருந்தது.

தொடர்ந்து எடுக்கப்படும் நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக தற்போது நோய் தொற்று 13 விழுக்காடாக குறைந்துள்ளது. நகரம், பேரூராட்சி, ஊரகப் பகுதிகளில் தொடர்ந்து வீடு வீடாகச் சென்று தொற்று உள்ளவர்களை கண்டறிந்து உரிய சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. பேரூராட்சி மற்றும் ஊரக பகுதிகளில் விதிமுறைகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்க உத்தரவிட்டுள்ளது. முக கவசம் அணியாமலும், அரசு விதித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாதவர்கள் மீதான நடவடிக்கை ஊரடங்கு தளர்த்தப் பட்டாலும் தொடரும்.
மேலும், கோவை மாவட்டத்தில் கருப்பு பூஞ்சை நோயால் ல் பாதிக்கப்பட்டு 7 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளார்கள். கருப்பு பூஞ்சை நோயினால் இறந்தவர்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தடுப்பூசியைப் பொருத்தவரை தற்போது தட்டுப்பாடு இல்லை என்றும் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் தற்போது 250 படுக்கை வசதிகள் உள்ளது. 500 படுக்கை வசதிகள் ஏற்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.