கோவை: பொள்ளாச்சி பகுதியில் மருத்துவ முகாம் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நெசவு தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொள்ளாச்சி பகுதியில், நெகமம், குள்ளக்காபாளையம், காட்டம்பட்டி, ஜலத்துார், சேரிபாளையம் உள்ளிட்ட, 30க்கும் மேற்பட்ட கிராமங்களில், கைத்தறி நெசவாளர் குடும்பங்கள் உள்ளன.
கொரோனா தொற்று பரவல் காரணமாக, நெசவு தொழில் முடங்கி, தொழிலாளர் குடும்பங்கள் வறுமையை சந்தித்தன. கடந்த இரண்டு மாதங்களாக தறிகள் இயங்காமல், தொழிலாளர் வாழ்வாதாரம் முடங்கியுள்ளது.
இந்நிலையில், அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகின்றன. நெசவாளர் குடியிருப்புகள், 5 - 10 கி.மீ., சுற்றளவில் உள்ளதால், பஸ் போக்குவரத்தும் இல்லாததால், தடுப்பூசி போட முடியாமல் தவிக்கின்றனர்.
இதனை தவிர்க்க, ஆங்காங்கே செயல்படும் நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் முகாம் அமைத்து, நெசவாளர் குடும்பத்தினர் அனைவருக்கும் தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.