கோவை: தி.மு.க., முன்னணி தலைவர்களின் நற்பெயருக்கும், புகழுக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் முகநூலில் அவதூறு தகவல்களை பகிர்ந்த நபர் மீது, தகுந்த நடவடிக்கை எடுக்க கோரி திமுகவினர் காவல் ஆணையரிடம் மனு அளித்தனர்.

கோவை மாவட்டம், குனியமுத்தூர், மின் நகரை சேர்ந்தவர் லோகநாதன் தி.மு.க., குனியமுத்தூர் பகுதி பொறுப்பாளர். இவர் நேற்று காலை கட்சியினருடன், கோவை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்தார்.
இந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது, முகநூலில் கனிமொழியின் காதலன் என்ற பக்கத்தில், எங்கள் கட்சி தலைவர்களின் பெயர்களுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் குனியமுத்தூர், நரசிம்மபுரம், கிருஷ்ணசாமி நகரை சேர்ந்த அ.தி.மு.க., குனியமுத்தூர் பகுதி பொருளாளர் சுரேஷ் பாபு, முன்னாள் முதல்வர் கருணாநிதி, முதல்வர் ஸ்டாலின், எம்.பி., கனிமொழி, தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், எம்.பி., ராசா ஆகியோர் குறித்து, அவதூறான தகவல்களை பரப்பியுள்ளனர்.
இப்பதிவுகள் பொதுமக்களிடையே, தி.மு.க., முன்னணி தலைவர்களின் நற்பெயருக்கும், புகழுக்கும் களங்கம் ஏற்படுத்தும் முறையில் அமைந்துள்ளது. இதுபோன்ற அவதூறு தகவல்களை பகிர்ந்த நபர் மீது, தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, இந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.