பொள்ளாச்சியில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைது - 300 மதுபாட்டில்கள் மற்றும் 2 கார் பறிமுதல்!

கோவை: பொள்ளாச்சியில் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை பதுக்கி விற்பனை செய்த இருவரை கைது செய்த போலீசார், 300 மதுபாட்டில்கள் மற்றும் 2 காரை பறிமுதல் செய்தனர்.


கோவை: பொள்ளாச்சியில் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை பதுக்கி விற்பனை செய்த இருவரை கைது செய்த போலீசார், 300 மதுபாட்டில்கள் மற்றும் 2 காரை பறிமுதல் செய்தனர்.

தமிழகத்தில் ஊரடங்கு தளர்வு ஏற்படுத்திய நிலையில், கோவை மாவட்டத்தில் தொற்று பாதிப்பு அதிகம் உள்ளதால், இன்னும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படவில்லை.

இந்நிலையில், அண்டை மாவட்டங்களான திருப்பூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் இருந்து அதிகளவிலான மதுபாட்டில்களை கடத்தி வந்து பொள்ளாச்சி மற்றும் கேரளாவுக்கு கொண்டு செல்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, மதுவிலக்கு போலீசார் பொள்ளாச்சி சி.டி.சி காலனி அருகே நடத்திய வாகன சோதனையில் கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்த பாலாஜி என்பவர் காரில் மது பாட்டில்கள் கடத்தி வந்தது தெரியவந்தது.



இதனையடுத்து, அவரிடம் இருந்து 237 மது பாட்டில்கள் மற்றும் காரை பறிமுதல் செய்த போலீசார், அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.



இதேபோல, பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியார் பகுதியில் போலீசார் நடத்திய வாகன சோதனையில் வசந்த் என்பவர் காரில் பதுக்கி வைத்து விற்பனை செய்த 67 மது பாட்டில்களையும, கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்த போலீசார் வசந்த் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...

கற்பகம் மருத்துவக்கல்லூரியில் 130 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

ஒத்தக்கல்மண்டபத்தில் உள்ள கற்பகம் மருத்துவக்கல்லூரி துணை சுகாதார அறிவியல் துறையின் இரண்டாம் பட்டமளிப்பு விழா நடைபெற்றது....

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...