கிணத்துக்கடவு தொகுதியில் கூடுதல் தடுப்பூசி மையம் அமைக்க திமுக பொறுப்புக் குழு உறுப்பினர் குறிச்சி பிரபாகரன் வலியுறுத்தல்..!

கோவை: கொரோனா பெருந்தொற்று தடுப்பு நடவடிக்கையாக கிணத்துக்கடவு தொகுதியில் கூடுதல் தடுப்பூசி மையம் அமைக்க வேண்டும் என மாவட்ட சுகாதார இணை இயக்குநரிடம் திமுக பொறுப்புக் குழு உறுப்பினர் குறிச்சி பிரபாகரன் வலியுறுத்தியுள்ளார்.


கோவை: கொரோனா பெருந்தொற்று தடுப்பு நடவடிக்கையாக கிணத்துக்கடவு தொகுதியில் கூடுதல் தடுப்பூசி மையம் அமைக்க வேண்டும் என மாவட்ட சுகாதார இணை இயக்குநரிடம் திமுக பொறுப்புக் குழு உறுப்பினர் குறிச்சி பிரபாகரன் வலியுறுத்தியுள்ளார்.



கோவை கிழக்கு மாவட்ட திமுக பொறுப்புக்குழு உறுப்பினர் குறிச்சி பிரபாகரன் இன்று கோவை மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் செந்தில்குமாரை சந்தித்து, கிணத்துக்கடவு தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் கூடுதல் தடுப்பூசி மையம் அமைக்கக் கோரி மனு அளித்தார்.

‘‘கிணத்துக்கடவு தொகுதிக்குட்பட்ட சுந்தராபுரம், ஈச்சனாரி, மதுக்கரை, மலுமிச்சம்பட்டி, எட்டிமடை, தீத்திபாளையம் ஆகிய இடங்களில் கூடுதல் தடுப்பூசி மையம் அமைக்க வேண்டும்.



மேலும், வெள்ளலூர், செட்டிபாளையம், மயிலேரிபாளையம் பகுதிகளில் உள்ள தடுப்பூசி மையங்களுக்கு கூடுதல் தடுப்பூசி வழங்க வேண்டும்'' என்று அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மனுவைப் பெற்றுக்கொண்ட மாவட்ட சுகாதார இணை இயக்குநர் செந்தில்குமார், ‘‘கோரிக்கைகளை விரைவில் நிறைவேற்றப்படும்'' என்று உறுதி அளித்துள்ளார்.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...