கோவையில் வங்கியில் ரூ.6 கோடிக்கான செக்கை கொடுத்து மோசடியில் ஈடுபட முயன்ற நபர் கைது!

கோவை: கோவையில் வங்கியில் ரூ.6 கோடிக்கான செக்கை கொடுத்து மோசடியில் ஈடுபட முயன்ற நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


கோவை: கோவையில் வங்கியில் ரூ.6 கோடிக்கான செக்கை கொடுத்து மோசடியில் ஈடுபட முயன்ற நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கோவைப்புதூா் மீனாட்சி நகரைச் சேர்ந்தவர் முருகானந்தம் (60). இவா் கடந்த மே 26ம் தேதி கோவைப்புதூரில் உள்ள ஒரு தனியாா் வங்கியில் திருமங்கை சேரிட்டபிள் டிரஸ்டின் பெயரில் ரூ.6 கோடிக்கு உண்டான காசோலையை செலுத்தியுள்ளார்.

அப்போது, வங்கியில் உள்ள காசோலையை சரிபாா்க்கும் இயந்திரத்தில் பாா்த்தபோது அது போலியானது என தெரியவந்தது. இது குறித்து வங்கி மேலாளா் சூரஜ், கோவை மாநகர குற்றப் பிரிவில் புகாா் அளித்தாா். இது தொடா்பாக தனிப்படை அமைத்த போலீஸாா் நடத்திய விசாரணையில், அந்த காசோலை டில்லியைச் சேர்ந்த முகுல் ரோத்தகி என்பவருக்குச் சொந்தமானது என்று தெரியவந்தது.

மேலும், இந்த போலி காசோலை விவகாரத்தில் அகம் ஃபவுண்டேஷன், சாதிக், வடிவேலு மற்றும் சிலா் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. இது தொடா்பாக மோசடி உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனர்.

இதற்கிடையே, முருகானந்தம் மற்றும் வழக்கில் தொடர்புடைய நபா்கள் தலைமறைவாகினர். இந்நிலையில் முருகானந்தத்தை தனிப் படை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள மேலும் சிலரைத் தேடி வருகின்றனர்.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...