கோவை: மேட்டுப்பாளையம் அருகே சிக்காரரம்பாளையம் ஊராட்சியில், தினந்தோறும் நான்கு பேர் என மொத்தம் 80 கர்ப்பிணிப் பெண்களுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

கோவை மாவட்டத்தில் கடந்த ஒன்றரை மாதமாக கொரோனா பெருந்தொற்று அதிகளவில் இருந்து வருகிறது. இந்தநிலையில், தமிழகத்தில் கடந்த மே மாதம் ஏழாம் தேதி முதல் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அனைத்து தரப்பு மக்களும் வேலைக்கு செல்ல முடியாமல் வீடுகளுக்கு உள்ளேயே முடங்கிப் போய் உள்ளனர். இதனால் மக்கள் பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்றனர்.
இந்தநிலையில், மேட்டுப்பாளையம் அருகே காரமடை ஊராட்சி ஒன்றியத்திற்குட்ட சிக்காரம்பாளையம் ஊராட்சியில் தலைவர் ஞானசேகரன் ஊராட்சிக்குட்பட்ட மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகின்றார்.

இதன் ஒருபகுதியாக ஊராட்சியில் வறுமை கோட்டிற்குக் கீழ் உள்ள 80 கர்ப்பிணி பெண்களுக்கு கண்ணார்பாளையம் அரசு பள்ளியில் இன்று வளைகாப்பு நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்துள்ளார். இதன்படி முதல்கட்டமாக தினசரி 4 பேருக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

இந்தநிகழ்ச்சியில் ஊராட்சியின் உறுப்பினர்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களின் உறவினர்கள் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து ஊராட்சித் தலைவர் ஞானசேகரன், கூறுகையில்: ‘‘கொரோனா பொதுமுடக்கத்தால் அனைத்துத் தரப்பு மக்களும் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர். இந்தநிலையில், கர்ப்பிணியாக உள்ள ஏழை பெண்களுக்கு சீமந்தம் நடத்த முடியாத நிலையில் சிலர் உள்ளனர். அவர்களை மகிழ்விக்க அவர்களில் ஒருவனாக நான் இதனை செய்து வருகி்றேன்'' என்று கூறினார்.