கோவை: கொரோனா ஊரடஙகு காரணமாக கடைகள் மூடப்பட்டு விற்பனை இல்லாதபோதும் தங்கத்தின்விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
கோவை: கொரோனா ஊரடஙகு காரணமாக கடைகள் மூடப்பட்டு விற்பனை இல்லாதபோதும் தங்கத்தின்விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
கொரோனா தொற்றுத் தடுப்பு நடவடிக்கையாக பொது ஊரடங்கு அமலில் உள்ளதால், கடந்த ஒரு மாதத்துக்கு மேல் தங்க நகை தயாரிப்பு மற்றும் விற்பனையை முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.
இந்த சூழ்நிலையிலும் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. மீண்டும் ஒரு சவரன் 38 ஆயிரம் ரூபாயை எட்டி உள்ளது மக்கள் மத்தியில் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து பேசிய கோவை தங்க நகை தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் முத்து வெங்கட்ராம், "கொரோனா நோய்தொற்று பரவல் காரணமாக கடந்த மே 6 முதல் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் நகை தயாரிப்பு மற்றும் விற்பனை முற்றிலும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
இருப்பினும் தங்கத்தின் விலை அதிகரித்துக் கொண்டே வருவது மக்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தலாம். அமெரிக்காவில் அந்நாட்டு டாலரின் மதிப்பு கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளதுதான் விலை ஏற்றத்துக்கு காரணமாகும்.
இதனால்தான் இப்போது தங்கத்தின் விலை மீண்டும் ஒரு சவரன் 38,000 ரூபாயைக் கடந்து உள்ளதற்கு காரணம்," என்றார்.
கோவை மார்க்கெட்டில் கடந்த சில நாட்களாக காணப்பட்ட ஒரு சவரன் (8 கிராம்) தங்கத்தின் விலை நிலவரம்
June 7: Rs 37,800
June 8: Rs 37,960
June 9: Rs 37,880
June 10: Rs 37,800
June 11 (இன்று): Rs 38,040