கோவை நஞ்சுண்டாபுரத்தில்‌ 56 பேருக்கு மட்டுமே கொரோனா: உருமாறிய கொரோனா என்ற புரளியை நம்ப வேண்டாம் - மாநகராட்சி எச்சரிக்கை

கோவை: கோவை நஞ்சுண்டாபுரத்தில் உருமாறிய கொரோனா தொற்று பரவுவதால் அதிகம் பேர் உயிரிழப்பதாக பரவி வரும் வதந்தியை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என மாநகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.



கோவை: கோவை நஞ்சுண்டாபுரத்தில் உருமாறிய கொரோனா தொற்று பரவுவதால் அதிகம் பேர் உயிரிழப்பதாக பரவி வரும் வதந்தியை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என மாநகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.

கோயம்புத்தூர்‌ மாநகராட்சியில்‌ கொரோனா நோய்கிருமியின்‌ தாக்கம்‌ தற்போது பொது மக்களிடையே குறைந்து வருகிறது. பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள்‌ காரணமாக நோய்த்தொற்றில் இருந்து பொதுமக்கள் பாதுகாக்கப்படுகின்றனர்.

இந்த நிலையில் மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;

“கோவை நஞ்சுண்டாபுரத்தில்‌ அதிகமான அளவில்‌ உருமாறிய கொரோனா பரவியுள்ளதாகவும்‌, அதனால்‌ மக்கள்‌ பலர் இறந்துள்ளதாக சில விஷமிகள்‌ பொய்யான தகவலை பரப்பிவருவதாக மாநகராட்சியின் கவனத்துக்கு வந்துள்ளது. நஞ்சுண்டாபுரத்தில்‌ நோய்தாக்கத்தை கண்டறிய இதுவரை 650 மாதிரிகள்‌ எடுக்கப்பட்டுள்ளன. அதன்படி கடந்த 10 நாட்களில்‌ 56 நபாகளுக்கு மட்டும்‌ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நோய்தொற்று பரவல் உள்ள பகுதி உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டு மாநகராட்சி பணியாளர்கள்‌ வீடுவீடாக சென்று மக்களிடம் காய்சல்‌, இருமல்‌, சளி, மூச்சுத்திணறல்‌, மயக்கம்‌, அதிக சோர்வு மற்றும்‌ வயிற்றுப்போக்கு இருக்கிறதா என்று விசாரணை செய்து வருகின்றனர். விசாரணையின் அடிப்படையில் பாதிப்பு இருப்போரை கண்டறிந்து அவர்களுக்கு தேவையான மருத்துவ வசதிகள்‌ மற்றும்‌ உதவிகள்‌ உடனுக்குடன்‌ செய்யப்பட்டு வருகின்றன. எனவே பொதுமக்கள்‌ இதுமாதிரியான பொய்யான வாந்திகளை நம்பவேண்டாம்‌.

மேலும்‌ பொய்யான தகவல்‌களைப் பரப்பிய விஷமிகள்‌ மீது மேல்‌ நடவடிக்கை மேற்கொள்ள காவல்துறையிடம்‌ புகார்‌ அளிக்கப்பட்டுள்ளது என மாநகராட்சி ஆணையர்‌ பெ.குமாரவேல்‌ பாண்டியன்‌ தெரிவித்துள்ளார்‌.”

இவ்வாறு மாநகராட்சி செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...