கோவை: பொது ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்ட கிணத்துக்கடவு மண்பாண்ட தொழிலாளர்களுக்கு அரசு தரப்பில் உதவ வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
கோவை: பொது ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்ட கிணத்துக்கடவு மண்பாண்ட தொழிலாளர்களுக்கு அரசு தரப்பில் உதவ வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியில் சிங்கரம் பாளையம், நெகமம், 200க்கு மேற்பட்ட குடும்பங்கள் மண்பாண்ட உற்பத்தி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு பிறப்பித்துள்ளதால் மண்பாண்ட தொழில் அடியோடு முடங்கியுள்ளது.
இது குறித்து பேசிய மண்பாண்ட உற்பத்தியாளர்கள், “மண்பாண்ட தொழிலாளர்கள் உற்பத்தி செய்து வைத்திருக்கும் மண்பானைகள் கோடைகாலத்தில் விற்பனை செய்ய முடியாமல் தேங்கி கிடக்கின்றன.

மேலும் ஏப்ரல், மே மாதங்களில் கோவில் திருவிழாக்கள் நடக்கும்போது பூச்சட்டிகள் அதிக விற்பனையாகும், ஆனால் கொரோனா காரணமாக திருவிழாக்கள் நடக்காததால் இந்த ஆண்டு வருமானம் இல்லாமல் வாழ்வாதாரம் இழக்கும் சூழ்நிலை ஏற்பட்டு இருக்கிறது.
எனவே வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மண்பாண்ட தொழிலாளர்களுக்கு தமிழக அரசு உதவி கரம் நீட்ட முன் வர வேண்டும்,” என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.