கோவையில் சுகாதார துப்புரவுப் பணியாளர்களுக்காக கோரிக்கைகளை வலியுறுத்தி ஏஐடியுசி-யினர் ஆர்ப்பாட்டம்!

கோவை: கோவை பாப்ப நாயக்கன்‌ புதூர்‌ வார்டு அலுவலகம்‌ முன்பு சுகாதார துப்புரவுப் பணியாளர்களுக்காக கோரிக்கைகளை வலியுறுத்தி ஏஐடியுசி-யினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.


கோவை: கோவை பாப்ப நாயக்கன்‌ புதூர்‌ வார்டு அலுவலகம்‌ முன்பு சுகாதார துப்புரவுப் பணியாளர்களுக்காக கோரிக்கைகளை வலியுறுத்தி ஏஐடியுசி-யினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கோவை பாப்ப நாயக்கன்‌ புதூர்‌ வார்டு அலுவலகம்‌ முன்பு ஏஐடியுசி மாவட்ட செயலாளர்‌ சந்திரன்‌ மற்றும்‌ முருகன்‌ தலைமையில்‌ நடைபெற்ற கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில், முன்கள பணியாற்றும்‌ சுகாதார துப்புரவு தொழிலாளர்களுக்கு ஆக்சி மீட்டர்‌, வெப்பமானி வைத்து தினமும்‌ பரிசோதனை செய்ய வேண்டும்‌. நோய்‌த் தொற்றால்‌ இறக்கும்‌ சுகாதாரத் தொழிலாளர்‌ குடும்பங்களுக்கு 25 லட்ச நிவாரணம் வழங்க வேண்டும்.



குடும்பத்தில்‌ ஒருவருக்கு அரசு வேலை. அனைத்து வகையான சுகாதாரத் துப்புரவுத் தொழிலாளர்களுக்கும்‌ மருத்துவத் துறை அரசாணைப்படி ஊக்கத்தொகை வழங்க வேண்டும்‌. தினசரி முகக் கவசம்‌ உட்பட அனைத்து பாதுகாப்பு சாதனங்களும்‌ வழங்க வேண்டும்‌ போன்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

கடந்த 7ஆம்தேதி கலெக்டரிடம்‌ இக்கோரிக்கைகள் அடங்கிய மனு அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து இன்று 9ஆம் தேதி பணிக்குப் போகும்‌ முன்‌பாக இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்‌ நடத்தப்பட்டது.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...