கோவை: கோவை பாப்ப நாயக்கன் புதூர் வார்டு அலுவலகம் முன்பு சுகாதார துப்புரவுப் பணியாளர்களுக்காக கோரிக்கைகளை வலியுறுத்தி ஏஐடியுசி-யினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கோவை பாப்ப நாயக்கன் புதூர் வார்டு அலுவலகம் முன்பு ஏஐடியுசி மாவட்ட செயலாளர் சந்திரன் மற்றும் முருகன் தலைமையில் நடைபெற்ற கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில், முன்கள பணியாற்றும் சுகாதார துப்புரவு தொழிலாளர்களுக்கு ஆக்சி மீட்டர், வெப்பமானி வைத்து தினமும் பரிசோதனை செய்ய வேண்டும். நோய்த் தொற்றால் இறக்கும் சுகாதாரத் தொழிலாளர் குடும்பங்களுக்கு 25 லட்ச நிவாரணம் வழங்க வேண்டும்.

குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை. அனைத்து வகையான சுகாதாரத் துப்புரவுத் தொழிலாளர்களுக்கும் மருத்துவத் துறை அரசாணைப்படி ஊக்கத்தொகை வழங்க வேண்டும். தினசரி முகக் கவசம் உட்பட அனைத்து பாதுகாப்பு சாதனங்களும் வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
கடந்த 7ஆம்தேதி கலெக்டரிடம் இக்கோரிக்கைகள் அடங்கிய மனு அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து இன்று 9ஆம் தேதி பணிக்குப் போகும் முன்பாக இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.