ஆட்டோ ஓட்டுநர்களுக்கு கொரோனா நிவாரண தொகை வழங்கவேண்டும்... கோவை இந்து முன்னணி சார்பில் ஆட்சியரிடம் கோரிக்கை..!

கோவை: கொரோனா பெருந்தொற்று ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், ஆட்டோ ஓட்டுநர்களுக்கு கொரோனா நிவாரண தொகை வழங்கக் கோரி இந்து முன்னணி சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.


கோவை: கொரோனா பெருந்தொற்று ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், ஆட்டோ ஓட்டுநர்களுக்கு கொரோனா நிவாரண தொகை வழங்கக் கோரி இந்து முன்னணி சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.



கோவை இந்து முன்னணி சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட மனுவில், ‘‘கொரோனா ஊரடங்கால்‌ ஆட்டோ தொழிலாளர்கள்‌ பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர்‌. தினந்தோறும் ஆட்டோ ஓடினால்‌தான்‌ ஆட்டோ ஒட்டுநர்கள் உணவு உண்ண முடியும்‌ எனும்‌ நிலையில்‌ தற்போதைய ஊரடங்கு நெருக்கடி நிலையிலிருந்து ஆட்டோ தொழிலாளர்களைக் காப்பாற்ற தமிழக அரசு சலுகைகளை அறிவிக்க வேண்டுமென தாழ்மையுடன்‌ கேட்டுக்கொள்கிறோம்‌.

மாதம்‌ தோறும்‌ 5000/-ரூபாய்‌ பொது முடக்கம்‌ அமலில்‌ இருக்கும்‌ வரை ஆட்டோ ஓட்டுநர்களுக்கு இழப்பீடாக வழங்க வேண்டும்‌. வாகனங்களின்‌ இன்ஷூரன்ஸ்‌ மற்றும்‌ வரி ஆகியவற்றை பாதியாகக் குறைக்க வேண்டும்‌.

வாகனங்களின் பெயரில்‌ பெறப்பட்டுள்ள மாத கடன்‌ தொகையை செலுத்த ஊரடங்கு முடியும்‌ வரை விலக்கு அளிக்க வங்கிகளுக்கு உத்தரவுகள்‌ பிறப்பித்து கொரோனா ஊரடங்கால்‌ பரிதவிக்கும்‌ ஆட்டோ ஓட்டுநர்களின்‌ குடும்பத்தைப் பாதுகாக்க வேண்டுமென தாழ்மையுடன்‌ இந்து ஆட்டோ தொழிலாளர்கள்‌ முன்னணி சங்கத்தின்‌ சார்பில்‌ கேட்டுக்கொள்கின்றோம்‌'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...