கோவை: கொரோனா பெருந்தொற்று ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், ஆட்டோ ஓட்டுநர்களுக்கு கொரோனா நிவாரண தொகை வழங்கக் கோரி இந்து முன்னணி சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

கோவை இந்து முன்னணி சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட மனுவில், ‘‘கொரோனா ஊரடங்கால் ஆட்டோ தொழிலாளர்கள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர். தினந்தோறும் ஆட்டோ ஓடினால்தான் ஆட்டோ ஒட்டுநர்கள் உணவு உண்ண முடியும் எனும் நிலையில் தற்போதைய ஊரடங்கு நெருக்கடி நிலையிலிருந்து ஆட்டோ தொழிலாளர்களைக் காப்பாற்ற தமிழக அரசு சலுகைகளை அறிவிக்க வேண்டுமென தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
மாதம் தோறும் 5000/-ரூபாய் பொது முடக்கம் அமலில் இருக்கும் வரை ஆட்டோ ஓட்டுநர்களுக்கு இழப்பீடாக வழங்க வேண்டும். வாகனங்களின் இன்ஷூரன்ஸ் மற்றும் வரி ஆகியவற்றை பாதியாகக் குறைக்க வேண்டும்.
வாகனங்களின் பெயரில் பெறப்பட்டுள்ள மாத கடன் தொகையை செலுத்த ஊரடங்கு முடியும் வரை விலக்கு அளிக்க வங்கிகளுக்கு உத்தரவுகள் பிறப்பித்து கொரோனா ஊரடங்கால் பரிதவிக்கும் ஆட்டோ ஓட்டுநர்களின் குடும்பத்தைப் பாதுகாக்க வேண்டுமென தாழ்மையுடன் இந்து ஆட்டோ தொழிலாளர்கள் முன்னணி சங்கத்தின் சார்பில் கேட்டுக்கொள்கின்றோம்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.