கோவை: அக்குவாசப் இன்ஜினியரிங் நிறுவனம் சார்பாக ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் கருவி கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தொடங்கப்பட்டது. அதனை மருத்துவக்கல்லூரி டீன் தொடங்கி வைத்தார்.
கோவை: அக்குவாசப் இன்ஜினியரிங் நிறுவனம் சார்பாக ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் கருவி கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தொடங்கப்பட்டது. அதனை மருத்துவக்கல்லூரி டீன் தொடங்கி வைத்தார்.
கோவையில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரக்கூடிய கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜனை உற்பத்தி செய்யும் வகையில் அக்குவாசப் இன்ஜினியரிங் நிறுவனம் குழாய் மூலமாக ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் கருவியை வழங்கியது. அதைத் டீன் தொடங்கி வைத்தார். இதனால், குழாய் மூலமாக நேரடியாக ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டு ஆக்சிஜன் தேவைப்படக்கூடிய கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு இது பெரும் உதவியாக இருக்கும்.
ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் கருவி நிமிடத்திற்கு 450 லிட்டர் ஆக்சிஜனை உற்பத்தி செய்யும் திறனை உடையது. குழாய்கள் மூலமாக உற்பத்தியாகும் ஆக்சிஜன் எடுத்து செல்லப்பட்டு நோயாளிகள் சிகிச்சை பெற வசதி செய்துள்ளோம். கொரோனா நோய் தீவிரமடைந்து உள்ள நோயாளிகளுக்கு இவ்வசதி பேருதவியாக அமையும். சுமார் அறுபத்து ஏழு இலட்சம் மதிப்புள்ள இக்கருவியை அக்குவாசப் இன்ஜினியரிங் நிறுவனம் நம் மருத்துவமனைக்கு வழங்கியுள்ளது என்று டீன் தெரிவித்தார்.