கோவை: கொரோனா பெருந்தொற்று பரவிவரும் நிலையில், கோவையில் வசிக்கும் வட இந்திய மக்களுக்கு கொரோனா பெருந்தொற்று நடவடிக்கையாக தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கு சிறப்பு முகாம் ஏற்படுத்தித் தருமாறு மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.

வட இந்திய வாழ் மக்கள் சங்க தலைவர் சரவண போஹ்ரா தலைமையில் மாவட்ட ஆட்சித் தலைவரை இன்று சந்தித்து இந்த கொரோனா பெருந்தொற்று காலத்தில் சேவையில் ஈடுபட்டிருக்கும் வட இந்தியர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு ஒரு முகாம் ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக் கொண்டனர்.

அத்துடன் ராஜ் புரோவிதே சேவா மண்டலைச் சார்ந்தவர்கள் இரண்டு சானிடைசர் மிஷின், 100 ஆக்சி மீட்டர்கள் மற்றும் 900 உயர்தர முகக்கவசம் ஆகியவற்றை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினார்கள். மாவட்ட ஆட்சியர், ‘‘ராஜஸ்தான் மக்கள் சேவை இந்தக் கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் சிறப்பாக உள்ளது'' என்று பாராட்டினார். அப்போது ராஜேஷ் கேட்டியா, பாகிராத் சிங், மோகன் சிங், மிஸ்ரிமல் ஆகியோர் உடன் இருந்தனர்.