கோவை: வால்பாறை அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்துக்குத் தேவையான யூபிஎஸ், படுக்கைகள், கட்டில்கள் உள்ளிட்ட ரூபாய் இரண்டு லட்சம் மதிப்பிலான பல்வேறு பொருட்களை சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி வழங்கி உதவினார்.

கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் அரசு மருத்துவமனை மற்றும் சுகாதார மருத்துவமனை உள்ளது. தற்சமயம் கொரோனா பெருந்தொற்று அதிகரித்து வரும் நிலையில், வால்பாறை கலைக்கல்லூரியில் கொரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டு தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருகிறது. இந்தநிலையில், வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி வால்பாறை அரசு மருத்துவமனையை ஆய்வு செய்தார்.
அப்போது, மருத்துவமனை மருத்துவர் மருத்துவமனைக்கு மின் தடை இல்லாமல் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க யூபிஎஸ் வேண்டுமென்றும் சுத்தமான குடிநீர் வழங்க ஆர்வோ மற்றும் படுக்கைகள் கட்டில்கள் போன்றவை வேண்டுமென்றும் கோரிக்கையை அளித்துள்ளார்.

அதனடிப்படையில், வால்பாறை நகராட்சி அலுவலகத்தில் இன்று சட்டமன்ற உறுப்பினர் அமுல்கந்தசாமியால் ஆய்வு கூட்டம் நடத்தி, அரசு மருத்துவமனை மருத்துவர்களிடம் இரண்டு லட்ச ரூபாய் மதிப்புள்ள யூபிஎஸ் மற்றும் 50 கட்டில்களும் 100 பெட் ஆகியவற்றோடு மேலும், அத்தியாவசிய உபகரணங்களும் வழங்கப்பட்டது.

தொடர்ந்து கொரோனா காலத்தில் முன் களப்பணியாளர்கள், மருத்துவர்கள், மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு வாழ்த்துகளும் நன்றியும் தெரிவித்தார். இந்நிகழ்வில் வால்பாறை அதிமுக நகர செயலாளர் மயில் கணேசன், மற்றும் நகராட்சி ஆணையாளர் சுரேஷ் குமார் மற்றும் கட்சியினர் கலந்து கொண்டனர்.