வால்பாறையில் ஆக்சிஜன் மையம்... நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் தொடங்கி வைத்தார்..!

கோவை: வால்பாறையில் 32 லட்சம் ரூபாய் செலவில் ஆக்சிஜன் மையம் அமைக்க நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் அவர்கள் குத்துவிளக்கேற்றி வைத்து பணியைத் தொடங்கி வைத்தார்.


கோவை: வால்பாறையில் 32 லட்சம் ரூபாய் செலவில் ஆக்சிஜன் மையம் அமைக்க நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் அவர்கள் குத்துவிளக்கேற்றி வைத்து பணியைத் தொடங்கி வைத்தார்.

கோவை மாவட்டம் வால்பாறையில் கொரோனா பெருந்தொற்று வந்ததைத் தொடர்ந்து, அதனைக் கட்டுப்படுத்த வால்பாறை அரசு கலைக்கல்லூரி கொரோனா சிகிச்சை மையம் 150 படுக்கைகள் அமைத்து ஆரம்பிக்கப்பட்டது. இதற்கான ஆக்சிஜன் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய வால்பாறை அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் உற்பத்தி மையம் அமைக்க நாடாளுமன்ற உறுப்பினர் தலைமையில், தன்னார்வலர்கள், எஸ்டேட் நிர்வாகிகள், வியாபாரிகள், அரசியல் கட்சியினர் போன்றவர்கள் இணைந்து 32 லட்ச ரூபாய் வழங்கி ஆக்சிஜன் உற்பத்தி நிலையம் அமைக்கும் பணி இன்று தொடங்கப்பட்டது.

நாடாளுமன்ற உறுப்பினர் சண்முக சுந்தரம் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்த இந்த நிகழ்ச்சியில், தெற்கு மாவட்ட பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ், வால்பாறை பொருளாளர் பால்பாண்டி, முன்னாள் நகரமன்றத் தலைவர் கோழி கடை கணேசன், வர்த்தக அணி ஜே.பாஸ்கர், மகுடீஸ்வரன், செந்தில் சுதாகர் போன்றவர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...