கோவை: கொரோனா பெருந்தொற்றுப் பரவல் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, பாதுகாப்பு நடவடிக்கையாக கிணத்துக்கடவு கொரோனா சிகிச்சை மையங்களில் ஜெய்ஹிந்த் பவுண்டேசன் சார்பாக தகவல் உதவி மையம் தொடங்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியில் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் நல்லட்டிபாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. கொரோனா சிகிச்சை மையத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்தநிலையில், கிணத்துக்கடவு அரசு மருத்துவமனை மற்றும் நல்லட்டிபாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தமிழக அரசு மற்றும் ஜெய்ஹிந்த் பவுண்டேசன் சார்பாக தகவல் உதவி மையம் இன்று தொடங்கப்பட்டுள்ளது. இந்தத் தகவல் உதவி மையம் மூலம் பொள்ளாச்சி மற்றும் கிணத்துக்கடவு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையங்களில் படுக்கை வசதி உள்ளதா என்று அறிந்து கொள்ளலாம்.
மேலும், ஜெய்ஹிந்த் பவுண்டேசன் சார்பாக நோயாளிகள் மற்றும் மருத்துவ ஊழியர்களுக்கும் உணவு வழங்கும் பணியும் செய்து வருகின்றனர்.