திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் புதிதாக 6 டன் ஆக்சிஜன் கொள்கலன் அமைக்கப்பட்டு வருகிறது - அமைச்சர் மு.பெ.சாமிநாதன்

திருப்பூர்: திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் புதிதாக 6 டன் ஆக்சிஜன் கொள்கலன் அமைக்கப்பட்டு வருவதாக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்துள்ளார்.


திருப்பூர்: திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் புதிதாக 6 டன் ஆக்சிஜன் கொள்கலன் அமைக்கப்பட்டு வருவதாக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்துள்ளார்.

திருப்பூர் 15.வேலம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தன்னார்வலர்கள் மூலம் அமைக்கப்பட்டுள்ள 200 படுக்கை கொண்ட கோவிட் கேர் சென்டரை செய்தித்துறை அமைச்சர் மு‌.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் உள்ளிட்டோர் திறந்து வைத்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மு.பெ.சாமிநாதன், திருப்பூர் மாவட்டத்தில் தொடர்ந்து கூடுதல் படுக்கைகள் அமைக்கப்பட்டு வருவதாகவும் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆக்சிஜன் தேவை அதிகரித்து வருவதால் 6 டன் ஆக்சிஜன் கொள்கலன் அமைக்கப்பட்டு வருவதாகவும், சில உதிரி பாகங்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டதால் அந்த பணிகள் தாமதம் அடைந்துள்ளதாக தெரிவித்தார்.

மேலும், குமரன் கல்லூரியில் அமைக்கப்பட்டு உள்ள 252 ஆக்சிஜன் படுக்கைகளுக்கு தேவையான ஆக்சிசன் கொள்கலன் அமைக்க பணிகள் நடைபெற்று வருவதாகவும், அந்த மையத்தை இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறினார்.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...